கோட் முதல் நாள் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… இதைத் தானே இவ்ளோ நேரமும் எதிர்பார்த்தோம்..!

Published on: September 6, 2024
goat
---Advertisement---

தளபதி விஜய் நடித்த கோட் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் முதன்முறையாகக் கைகோர்த்துள்ளார். இப்படி ஒரு படமா என அனைவரும் வியக்கும் வகையில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், விஜயகாந்த் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருந்தது.

Also read: தமிழ்நாட்டில் சொற்ப கோடிகள்தான் கோட் வசூல்… விஜய் கேரியரின் மோசமான ரெக்கார்ட்

அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்ததாகவும் படம் பார்த்தவர்கள் 3 மணி நேரம் போனதே தெரியவில்லை என்று சொன்னார்கள். அதே நேரம் படத்திற்கு நெகடிவிட்டியான விமர்சனங்களும் வந்தன. குடியிருந்த கோயில், ராஜதுரை படங்களின் கதையாக இருந்தது. அது மட்டுமல்லாமல் படத்தில் இயக்குனர் டெக்னாலஜியை நம்பி விட்டார்.

இரண்டு விஜய் எதுக்குத் தான் போட்டாங்கன்னே தெரியல என்றும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. ஆனால் எல்லாவற்றையும் கடந்து படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. தொடர்விடுமுறையால் படத்தின் வசூல் சக்கை போடு போடும என்றே தெரிகிறது.

vijay
vijay

படத்தில் விசில் போடு சாங்கிற்கு முதலில் எதிர்மறை வசனங்கள் வந்தது. அப்போது இந்தப் படத்தோடு பாடலைப் பார்க்கும்போது நீங்கள் நினைத்தது போல இருக்காது. பாடல் பட்டையைக் கிளப்பும் என்றார்கள். அதே போல படத்தில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கிறது.

படத்தில் வில்லனாக வரும் மோகன் எடுபடவில்லை என்றும் இளவயது விஜய் நெகடிவ் ஷேடில் வந்து கலக்கி இருக்கிறார் என்றும் தகவல்கள் வந்தன. அதே நேரம் ஏஐ, டீஏஜிங் டெக்னாலஜிகள் எடுபடவில்லை என்றும் சொல்வதைக் காண முடிந்தது.

கோட் முதல் நாள் வசூல் எப்படி என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அதிகாரப்பூர்வமான தகவல் தயாரிப்பு தரப்பே வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு நாள் வசூல் உலகம் முழுவதும் முதல்நாளான நேற்று மட்டும் 126 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்பதை வசூல் தொடர்ந்து நிரூபிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.