மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? செமையா இருந்து இருக்குமே!

Mookuthi Amman: அம்மன் படங்களில் வித்தியாசமாக வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாராவுக்கு முன்னர் நடிக்க இருந்த முன்னணி நடிகை குறித்த ஆச்சரிய தகவல்களை ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பாலிவுட்டின் பிகே படத்தினை மனதில் வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன்.

இதையும் படிங்க: சிவாஜி மாதிரியே இவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு!.. கவுண்டமணி பெயர் வந்தது இப்படியா?!..

இப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருப்பார். ஆனால் இந்த ரோலுக்கு முதலில் ஆர்.ஜே பாலாஜி இப்படத்தில் நேரடியாக நயன்தாராவை நடிக்க வைக்கவில்லையாம். ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின்னர் இப்படத்தில் தனக்கான அடையாளத்தினை உருவாக்க எண்ணினார். ஆனால் டிராமாட்டிக்காக இல்லாமல் நிஜ வாழ்க்கையை மையப்படுத்த எண்ணினாராம்.

இப்படத்தில் டான்ஸ ஆட கூடாது, பாட்டு பாடக்கூடாது, காதல் செய்ய கூடாது என முடிவெடுத்தாராம். ஆனால் ஹீரோயின் தேவைப்படும் என்பதால் அவர்கள் ரோலை கண்ணியமாக இருக்க வேண்டும். அடுத்து சென்னையில் நடக்கும் கதையாக இல்லாமல் மொத்த தமிழ்நாடும் விரும்பும்படி இருக்க வேண்டும் என்பதால் லால்குடியில் இந்த படத்தினை இயக்கி இருந்தனர். அரசியல் பேசியதுக்கு காரணம். அந்த சமயத்தில் சோஷியல் மீடியாவில் இருந்து விலகி இருந்த ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய அரசியல் எண்ணத்தினை வைக்க எண்ணினார்.

இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்க அலப்பறைய! ‘குக் வித் கோமாளி’யை கூண்டோடு காலிபண்ண இறங்கிய வடிவேலு

ஏற்கனவே படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டதால் அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டாராம். இதை தொடர்ந்தே நயனிடம் பேசும்போது அவர் உடனே நடிக்க ஒப்புக்கொண்டு அந்த ரோலில் நடித்து ஹிட்டடித்ததாக கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story