மம்மூட்டி வச்சு வொர்க் அவுட் ஆகல.. நயன் வந்ததும் ஹைப் ஏறிருச்சு! அதான் லேடி சூப்பர்ஸ்டார்
Actress Nayanthara: நயன்தாரா நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது மம்முட்டி. ஆனால் அது வொர்க் அவுட் ஆகவில்லை என சமீபத்திய ஒரு பேட்டியில் அஜய் ஞானமுத்து கூறியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
இதோ அந்தப் படம் உருவான பின்னணி இதோ. அஜய் ஞானமுத்து முதன் முதலில் டிமான்டி காலனி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். முதலில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் உதவியாளராக இருந்தவர். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் வீட்டில் ஒரு பார்ட்டி நடந்ததாம்.
இதையும் படிங்க: கமல் சிம்பிளா முடிச்சாரு.. ஆனால் ரஜினிகாந்த் போட்ட சீன் இருக்கே… பிரபல நடிகரையே மிரட்டிய சம்பவம்
அது முடித்துவிட்டு உடனே தனக்கென ஒரு குரூப்பை ஃபார்ம் செய்து கொடைக்கானலுக்கு இமைக்கா நொடிகள் ஸ்கிரிப்ட் எழுதப் போய்விட்டாராம். அப்போவே இந்த படத்தின் ஹீரோ அதர்வாதான் என முடிவெடுத்து விட்டாராம் அஜய் ஞானமுத்து.
அதனால் அதர்வாவும் அஜய் ஞானமுத்துவும் இந்த ஸ்கிரிப்டுக்கு ஒரு தயாரிப்பாளரை தேடி அலைந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட இரண்டரை வருட காலம் தயாரிப்பாளரை தேடி இருக்கிறார்கள். யாருமே செட் ஆகவில்லை. அதன் பிறகு தான் டிமான்டி காலனி படத்தை முதலில் முடித்து விடலாம் என அந்த படத்தை எடுத்து ஒரு பெரிய ஹிட்டை கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: காந்தி – விநாயக் ஒன்னா வந்தா எப்படி இருக்கும்? வைரலாகும் விஜய் அஜித் புகைப்படம்
அந்த படத்திற்குப் பிறகு விஜய்க்கு ஒரு ஸ்கிரிப்ட் சொல்ல போய் அந்த ஸ்கிரிப்டில் சொதப்பினாராம் அஜய் ஞானமுத்து. அதன் பிறகு அதர்வாவே அஜய் ஞானமுத்துவுக்கு கால் செய்து இப்போ அந்த படத்தை பண்ணலாமா என இமைக்கா நொடிகள் படத்தை ஆரம்பிக்க தயாரானார்களாம்.
படத்தை பொறுத்தவரைக்கும் அக்கா தம்பி என்ற ஒரு பாண்டிங் தான் இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் தாய்மாமன் மருமகன் என்ற கோணத்திலேயே படத்தின் ஸ்கிரிப்டை எழுதி இருக்கிறார் அஜய் ஞானமுத்து. அப்போது தாய்மாமன் என்ற கேரக்டருக்கு மம்மூட்டியை ஃபிக்ஸ் செய்து மம்மூட்டியிடமும் சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோட்ட மாட்டிட்டாப்ல! சும்மா மாஸா இருக்காப்ல.. வெளியான பிக்பாஸ் 8 ப்ரோமோ
இதற்கு மம்முட்டியும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஸ்கிரிப்ட் பல தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லையாம். அதன் பிறகு தான் அக்கா தம்பி என மாற்றுவோம் என மம்முட்டியை தூக்கிவிட்டு அக்கா கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க நயன்தாராவிடம் போய் பேசி இருக்கிறார்.
நயன்தாராவுக்கும் இந்த கதை பிடித்து போக அதன் பிறகு தான் இந்த படம் உருவானது. நயன்தாராவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி சில நிமிட காட்சியில் வருவார். ஆனால் அவர் வரும் காட்சி படம் முழுக்க ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்படி தான் இமைக்கா நொடிகள் திரைப்படம் உருவானது என அஜய் ஞானமுத்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.