Cinema News
கோட்ட மாட்டிட்டாப்ல! சும்மா மாஸா இருக்காப்ல.. வெளியான பிக்பாஸ் 8 ப்ரோமோ
BiggBoss Season 8: பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கப் போவது யார் என்ற ஒரு கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இன்று அதற்கான விடையை ப்ரோமோ வீடியோ மூலம் வெளியிட்டு இருக்கிறார்கள் விஜய் தொலைக்காட்சி நிறுவனம். கடந்த ஏழு சீசன்களாக வெற்றிகரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
அவர் வரும் சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள். அவருடைய கேள்வி கேட்கும் விதம், தோரணை போட்டியாளர்களை வெளுத்து வாங்கும் விதம் என ஒரே களேபரமாகத்தான் இருக்கும் .ஆறு நாட்கள் பார்ப்பதை விட சனி ஞாயிறு கிழமைகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: விசில் போடு நண்பா!.. வெளியான கோட் புரமோ வீடியோ!.. தாறுமாறா இருக்கே!…
அந்த அளவுக்கு கமல் தொகுத்து வழங்கும் விதம் அனைவரையும் ஈர்த்தது. 100 நாட்கள் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் இந்த வீட்டினுள் நுழைந்து அவர்களுக்குள்ளாகவே தேவையானதை பரிமாறிக் கொண்டு அது சண்டையானாலும் சரி மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஆனாலும் சரி எல்லாமே அந்த ஒரு வீட்டிற்குள் தான் நடக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் கமல். உலக நாயகன் எனப் போற்றப்படும் கமல்ஹாசன் சின்னத்திரைக்குள் எப்படி வருவார் என்ற ஒரு பிரமிப்பு அனைவருக்கும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அதையும் தாண்டி அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றதும் அதுவே இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இவ்வளவு குழப்பமா? விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளிவந்த பக்கா அப்டேட்
இப்படி ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை வெற்றிப்பாதையை நோக்கி கொண்டு செலுத்திய கமல் இந்த எட்டாவது சீசனை தொகுத்து வழங்கப் போவதில்லை என அறிக்கை மூலமாக அறிவித்தது அனைவருக்குமே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து இந்த எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவரும் மத்தியில் இருந்தது.
சிம்புவாக இருக்கலாம். ரம்யா கிருஷ்ணனாக இருக்கலாம் என பல பேர் கூறிவந்த நிலையில் கடைசியாக விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. இருந்தாலும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா மாட்டாரா என்ற ஒரு சந்தேகமும் இருந்தது.
இதையும் படிங்க: கோட் படத்தின் புதிய வீடியோ!.. ரிலீஸுக்கு முன் ஒரு ட்ரீட்!.. அர்ச்சனா கொடுத்த அப்டேட்!..
ஏனெனில் மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்ற முடிவெடுத்திருந்த விஜய் சேதுபதி ஹீரோவாக தன் கவனத்தை திருப்பி படங்களில் நடிப்பார். அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்று அனைவரும் கூறி வந்தார்கள்.
ஆனால் இதையும் ஒரு கை பார்த்து விடலாம் என இந்த நிகழ்ச்சியை இப்போது விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோ வீடியோ தான் இன்று வெளியாகி இருக்கிறது. கோட் சூட்டில் கமலையே பார்த்த ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி எந்த மாதிரியான லுக்கில் இருப்பார் என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. ஆனால் அவருடைய ஸ்டைலில் ஒரு வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி இந்த ப்ரோமோ வீடியோவில் நடித்திருக்கிறார். அது பார்ப்பதற்கும் சந்தோஷமாக இருக்கிறது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ: https://x.com/vijaytelevision/status/1831308866673688812