ரஜினி சிவாஜி ராவாக இருந்த காலகட்டம். சினிமாவில் எப்படியாவது நுழைந்து சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வெறியுடன் பெங்களூருவில் இருந்து கண்டக்டர் வேலையைத் துறந்துவிட்டு சென்னைக்கு வருகிறார். அவரது முயற்சிக்கு முதல் சினிமாவிற்கான அழைப்பு எப்படியோ கிடைத்து விடுகிறது. அதுவும் பாலசந்தர் படம். அபூர்வ ராகங்கள்.
Also read: அடடடடா! அப்பப்பா.. நயன் நடிச்ச படத்தை பார்த்து மகன்கள் இருவரும் கொடுத்த ரியாக்ஷன்
அந்த வகையில் அவரது முதல் காட்சியே பெரிய கேட்டைத் திறந்து கொண்டு பைரவியாக நடித்த ஸ்ரீவித்யாவின் வீட்டுக்குள் நுழைவது தான். அதை பாலசந்தர் லோ ஆங்கிளில் படமாக்கி இருப்பார். அந்தக் காட்சி அபூர்வ ராகங்களில் இடம்பெற்ற சிவாஜிராவின் முதல் காட்சியாக மட்டும் இல்லாமல், சிவாஜிராவ் என்ற மாபெரும் கலைஞன் தமிழ்த்திரை உலகின் கதவுகளைத் திறந்து கொண்டு அடி எடுத்து வைக்கும் முதல் காட்சியாகவும் அமைந்தது.
அடுத்துப் படமாக்கப்பட்ட காட்சியில் தனது பைக் சாவியை மேலும் கீழும் தூக்கிப் போட்டு பிடித்த படி ஸ்ரீவித்யாவுடன் கமல் பேசிக் கொண்டு இருப்பார். ஒரு கட்டத்தில் அந்த சாவி கைதவறி கீழே விழும். உடனே கீழே எட்டிப் பார்ப்பார். அங்கு சிவாஜி ராவ் நின்று கொண்டு இருப்பார். வெறித்த பார்வை, பரட்டைத்தலை என்று காணப்படுவார். ‘நீ யார்’ என்று கேட்பார் கமல்.

‘நான் பைரவியோட புருஷன்’ என்று பதில் சொல்வார் சிவாஜி ராவ். அவர் அப்படி பதில் சொன்னதும் அவசரம் அவசரமாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த கமல், அவரை வீட்டுக்குள் அழைத்துச் செல்வார். இந்தக் காட்சிப் படமாக்குவதற்கு முன்னால் நான் பைரவியோட புருஷன் என்ற அந்த ஒருவரி வசனத்தை 100 முறை சொல்லிப் பார்த்துக் கொண்டாராம் சிவாஜி ராவ். ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என்று பாலசந்தர் சொல்லும்போதெல்லாம் சிவாஜி ராவுக்கு கையும் ஓடலை.
Also read: மீண்டும் அந்த இயக்குனருடன் ஒரு படம்!.. ரஜினியின் லைன்-அப் லிஸ்ட் இதோ!…
காலும் ஓடலை. அந்த சமயம் நாகேஷ் கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பாராம். ‘நீ ஏன்டா அவனைக் கிண்டல் பண்றே’ன்னு பாலசந்தர் சொல்வாராம். ‘பாலு என்ன சொல்றானோ அதையே பண்ணு. அது போதும். அப்படித்தான் நான் பல வருஷமா பண்ணிக்கிட்டு இருக்கேன்’ என்றார் நாகேஷ். அதற்குப் பின்னால் வந்த காட்சிகளில் ஒரு தேர்ந்த நடிகரைப் போல நடித்துள்ளார் ரஜினிகாந்த். மேற்கண்ட தகவலைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
