Oscar Level Movies: சினிமா துறையில் மிகப்பெரிய உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. சினிமாவின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தனித்தனியாக இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து அதுவும் தமிழ் நாட்டில் இருந்து ஆஸ்கார் விருதை பெற்ற முதல் தமிழராக ஏஆர் ரஹ்மான் திகழ்கிறார்.
இந்த நிலையில் இந்த விருதுக்கு இந்தியாவில் இருந்து மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டிய படமாக 2018 திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட விளைவுகளை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை நக்கலடித்த நாகேஷ்.. படத்தின் மூலம் பதில் சொன்ன பொன்மன செம்மல்!..
இந்தப் படம் மலையாள உலகில் பாக்ஸ் ஆஃபிஸில் அதிகளவில் வசூலை நிகழ்த்திய முதல் படமாகவும் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 2 பில்லியன் அதாவது 200 கோடி வசூலை பெற்றுள்ளதாம்.
இந்த நிலையில் 2018 படத்திற்கு பதிலாக இந்தியாவில் இருந்து 3 தமிழ்ப்படங்களைத்தான் தேர்வு செய்யப்போவதாக இருந்தார்களாம். ஆனால் அந்தப் படங்கள் இந்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட படமாக இருந்ததனால் அதை ஆஸ்காருக்கு அனுப்பவில்லையாம்.
இதையும் படிங்க: சிரிப்ப அடக்க முடியல!.. சந்திரமுகி 2வை வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்!.. அந்த டைனோசர் மீம் தான் ஹைலைட்!.
அந்தப் படங்கள் விடுதலை, வாத்தி, மாமன்னன் போன்ற திரைப்படங்களாம். இதில் மாமன்னன் மற்றும் விடுதலை போன்ற படங்கள் குறிப்பிட்ட ஜாதியினர் மற்றும் சமூகத்தை பற்றி அதிகளவில் எடுத்துரைக்கும் படமாக அமைந்திருக்கும்.
ஏற்கனவே இந்தியா இந்த மாதிரி சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்ற கொள்கையை வலியுறுத்தி வரும் நிலையில் இந்த மாதிரி படங்கள் ஆஸ்காருக்கு செல்லும் போது மற்ற உலக நாடுகள் இந்தப் படத்தை பார்த்தால் இந்தியாவில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ற கேள்வி உலக நாடுகளிடையே ஏற்படும் என்ற காரணத்தினாலேயே இந்தப் படங்களை அனுப்பவில்லை என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பேன் இந்தியாலாம் இல்லையாம் – யுனிவெர்ஸ் லெவலில் தயாராகும் ஜேசனின் படம்
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…