Cinema News
முதன் முறையாக ஒரு நடிகைக்கு நடனம் சொல்லிக் கொடுக்க பயந்த கலா! இவங்களுக்கா?
இந்திய சினிமாவிலேயே ஒரு ஒப்பற்ற நடனக் கலைஞராக திகழ்பவர் கலா மாஸ்டர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் ஆதரவால் சினிமாவில் நுழைந்தார். தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழி சினிமாக்களிலும் இவரின் பணி மென்மேலும் சிறந்து விளங்குகிறது.
ஆரம்பத்தில் உதவியாளராக இருந்த கலா புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குரூப் டான்சராகவே தன் கெரியரை ஆரம்பித்த இவருக்கு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த புதுபுது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக மாறினார்.
இதையும் படிங்க: ‘ஜவான்’ போட்ட போடு.. இன்ஸ்டாவில் நுழைந்த ரகசியம்.. சும்மா ஆடுமா குடுமி?!…
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் 4000 க்கும் மேற்பட்ட பாடல்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு பிடித்த நடனக் கலைஞராக நடிகை பானுப்பிரியாவைத்தான் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் பானுப்பிரியாவிடம் கலா சில காலம் உதவியாளராக இருந்தாராம். ஒரு சமயம் அழகன் திரைப்படத்திற்காக நடனம் அமைக்க கே.பாலசந்தர் கலாவை அழைத்தாராம். அப்போது அவரிடம் ஒரு டையலாக் பேப்பரை கொடுத்தாராம். அப்போது கலாவிற்கு புரியவில்லையாம்.
இதையும் படிங்க : எவனோ போட்டிக்கு வந்துட்டான்… பாரதிராஜா படம் பார்த்து ஷாக்கான பாலசந்தர்… என்ன படமோ!
அதன் பிறகு இந்த பேப்பரில் எழுதிய பாடலுக்கு ஏற்ப ஜதி அமைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றாராம்.அதன் பிறகு அந்தப் பாடலுக்கு ஆட பானுப்ரியா வர கலாவுக்கு ஒரே பயம் கலந்த அதிர்ச்சியாம். எப்பேற்பட்ட ஒரு நடன கலைஞர்? இவருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதா? என தயங்கினாராம்.
அதன் பிறகு பானுப்ரியா பயப்படாதே கலா. நல்லா பண்ணு என்று சொல்லிவிட்டு சென்றாராம். கலாவின் வாழ்க்கையில் முதன் முதலில் பயந்த விஷயம் என்று ஒரு பேட்டியில் இதைப் பற்றி கூறினார்.
இதையும் படிங்க : அண்ணன் புகழை பாடிய அட்லீக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கடுப்பில் பிரபலம் செய்த வேலை…