18 வயசு ஆச்சுங்க!.. அப்படித்தான் இருப்பார்! மகனுக்கு முட்டு கொடுக்கும் உதயநிதி ஸ்டாலின்...

by Rohini |
uthay
X

uthay

கடந்த ஆண்டு மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கி திக்குமுக்காடி போனார் உதயநிதியின் மகனான இன்பநிதி. இவர் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார். ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பு, உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பு என அந்தக் கட்சி பிஸியாக இருக்கும் போது அதை கலைக்க வேண்டும் என்பது போல திடீரென ஒரு புகைப்படம் வைரலானது.

அந்தப் புகைப்படத்தில் உதயநிதியின் மகனான இன்பநிதி தன் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தன.அதை இணையம் முழுவதும் பரவ விட்டு வேடிக்கை பார்த்தது சில அமைப்புகள் என்று அரசியலில் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்திலும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

uthay1

uthay1

அந்த நேரத்தில் உதயநிதியின் மனைவியான கிருத்திகாவும் ஒரு ட்விட் ஒன்றை பதிவிட்டு அதற்கு எதிர்மறையாக போட்டாரா என தெரியவில்லை. அந்த ட்விட்டரில் ‘ நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மகிமையில் புரிந்துகொள்ள இதுவும் ஒரு வழி’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் உதயநிதி நடித்து திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கும் படமான ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதற்கு உதயநிதியும் கலந்து கொண்டார். மேலும் அந்தப் படத்திற்கான புரோமோஷன் மற்றும் நேர்காணலிலும் கலந்து கொண்டு வருகிறார்.

uthay2

uthay2

அப்போது ஒரு நேர்காணலில் அவரது மகன் இன்பநிதியின் புகைப்படம் குறித்து கேட்டபோது அதற்கு பதிலளித்த உதயநிதி ‘ஆமாங்க , அவனுக்கு 18 வயசு ஆச்சு, மெச்சூர் ஆயிட்டான். மேலும் இந்த விஷயம் எனக்கு, என் பையனுக்கு , என் மனைவிக்கு இடையில் இருக்கும் பெர்சனல் . அதை வெளியில் சொல்லனும் என்று அவசியம் இல்லை. மேலும் இது அவனுடைய பெர்சனல், அதில் தலையிட எனக்கே உரிமை இல்லை’ என்று அதுக்கு சப்போர்ட் பண்ணுகிற மாதிரி உதயநிதி பேசியிருந்தார்.

இதையும் படிங்க : சாலிகிராமத்தையே விலைக்கு வாங்கியிருப்பேன்!.. அந்த அளவு சொத்து இருந்தும் என்ன செய்தார் தெரியுமா கபாலி?..

Next Story