‘ரெட்ரோ’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலுதான்! என்னப்பா சொல்றீங்க?

by Rohini |   ( Updated:2025-04-21 09:46:02  )
retro (1)
X

retro (1)

Retro: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படமாக இந்த ரெட்ரோ திரைப்படம் உருவாகியிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. டிரெய்லரும் வெளியாகி இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கின்றன. நீண்ட நாளுக்கு பிறகு சூர்யாவை எப்படி பார்க்க ஆசைப்பட்டார்களோ அப்படியான கதையாகத்தான் இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான லுக், மிரட்டும் ஆக்‌ஷன் என சூர்யா அனைவரையும் மிரள வைத்திருக்கிறார். அஞ்சான் திரைப்படம் வெற்றியடைய வில்லை என்றாலும் அந்த மாதிரியான லுக் மற்றும் நடிப்பு இந்த படத்தில் சூர்யாவிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. ஆரம்பத்தில் எதார்த்தமாகவேதான் சூர்யா நடித்திருப்பார். ஆனால் சமீபகாலமாக கேரக்டருக்காக மிகவும் மெனக்கிட்டு நடிப்பதை போல் இருக்கின்றது.

ஆனால் ரெட்ரோ திரைப்படத்தில் அப்படி இல்லை. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படம் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. கங்குவா படத்தின் தோல்வி இந்தப் படம் அதை சரிசெய்யும் என்றே ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ரெட்ரோ படத்தில் முதலில் வடிவேலுவைத்தான் யோசித்தோம் என கார்த்திக் சுப்பராஜ் கூறியது வைரலாகி வருகின்றது.

அது வேறு ஒன்றுமில்லை. படத்தில் ஜெயராம் நடித்த கேரக்டரில் முதலில் வடிவேலுவைத்தான் நினைத்தார்களாம். ரெட்ரோ படத்தில் ஒரு காமெடியான கேரக்டரில் ஜெயராம் நடித்துள்ளார். யாரை போடலாம் என்று யோசித்த போது வடிவேலுதான் நினைவுக்கு வந்திருக்கிறது. இருந்தாலும் விவாதத்தில் ஒரு உதவி இயக்குனர் ஜெயராம் பெயரை சொல்ல உடனே ஜெயராம் செட்டாவார் என கார்த்திக் சுப்பராஜ் நினைத்துவிட்டாராம்.

ஏனெனில் பஞ்ச தந்திரம் படத்தில் ஜெயராமின் காமெடியை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்ட ஜாலியான டைப் தானாம் ஜெயராம். அதனால் அவர் ரெட்ரோ படத்திற்கு செட்டாவார் என்று நினைத்து அவரை நடிக்க வைத்தாராம் கார்த்திக் சுப்பராஜ்.

Next Story