தனுசுடன் கிசுகிசுக்கப்பட்ட ஐந்து நடிகைகள்!!.. ஆளுதான் சுள்ளான் சூடான சுளுக்கு எடுத்துருவான்!!..

Published on: July 17, 2023
dhanush 7
---Advertisement---

இன்றைய சினிமாத்துறை வட்டாரங்களில் மிகவும் வளர்ந்து வரும் நடிகர்களில் தனுசும் ஒருவர்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக வடசென்னை, அசுரன் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தனுஷ் அவர்கள் நடிப்பில் கமலஹாசன் விக்ரம் போன்றவர்களுக்கு இணையான ஒரு நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர் ஆவார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் உடன் தொடர்பில் இருந்த ஐந்து நடிகைகளின் வாழ்க்கை தற்சமயம் கேள்விக்குறியாகி உள்ளது அந்த நடிகைகளின் பட்டியல் பின்வருமாறு..

 

shuruthi hassan
shuruthi hassan

சுருதிஹாசன்

2012 ஆம் ஆண்டு 3 எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை சுருதிஹாசன் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரானார்.இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் ஜோடியாக நடித்திருந்தார். இவர்களது கெமிஸ்ட்ரி படத்தில் நன்கு ஒர்க் அவுட் ஆனது. மேலும் இந்த படத்தில் மூலம் இவர்களுடைய நட்பு தொடர்ந்தது இந்த படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் முழு ஈடுபாடுடன் இருவரும் நடித்திருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த நேரத்தில் நடிகர் தனுஷ் நடிகை ஸ்ருதிகாசனுடன் நிறைய நாட்கள் ஒரே ரூமில் சூட்டிங் ஸ்பாட்டில் தங்கி உள்ளார்கள். அதனால் இவர்களுக்கு இடையே கிசு கிசு செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க- கல்யாணமே பண்ணிக்காம வாழ்க்கையை தொலைத்த ஐந்து நடிகைகள்!!.. இப்படி நடிச்சா எப்படி கல்யாணம் ஆகும்!!..

 

amala paul
amala paul

 

அமலாபால்

இதனை அடுத்து வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்த நடிகை அமலா பாலுக்கும் தனுஷுக்கும் இடையே நிறைய கிசு கிசு செய்திகள் வெளியாயின. அந்த நேரத்தில் ஏ எல் விஜய் அவர்கள் அமலாபாலை திருமணம் செய்து இருந்தார். திருமணம் செய்து சிறிது மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து இருந்தார்கள். அதற்கு காரணம் தனுஷ் தான் என்று அனைவராலும் கூறப்பட்டு வந்தது. இதனை எடுத்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் அமலாபால் நடித்திருந்தார். மேலும் அம்மா கணக்கு எனும் திரைப்படத்தை தனுஷ் தயாரிப்பில் அமலாபாலை வைத்து இயக்கியிருந்தார்கள்.

dhivya dharshini
dhivya dharshini

திவ்யதர்ஷினி

அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக நீண்ட நாட்கள் பணியாற்றி வந்த டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி அவர்களுடன் தனுஷ் அவர்கள் இணைப்பில் இருந்தது பிரபல செய்தி ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இவர்களுக்கு இடையே பவர் பாண்டி என்னும் திரைப்படத்தின் மூலம் தொடர்பு வந்தது. ஒரு நாள் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா அவர்கள் வீட்டில் இல்லாத போது நடிகை டிடி-ஐ வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.அப்போது திடீரென்று தனுஷின் மனைவி ஐஸ்வர்யா வீட்டிற்கு வரவே இதை பார்த்துள்ளார். அதன்பின், ஐஸ்வர்யா டிடியின் கணவரிடம் இதனைச் சொல்ல.. அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை உருவானது. இதற்கு பிறகு அவர்கள் இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாயின.

trisha
trisha

திரிஷா

அடுத்ததாக நடிகை திரிஷா அவர்கள் பிரபல தொழிலதிபர் வருனுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனை அடுத்து திரிஷா நிறைய பார்ட்டிகளில் தனுஷ் உடன் புகைப்படங்களை எடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் கசிந்தது. மேலும் இதனைப் பார்த்த அவரது கணவர் திருமணத்தை அப்படியே டிராப் செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து த்ரிஷாவும் கல்யாணம் பற்றி இன்று வரை கவலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

dhanush samantha
dhanush samantha

சமந்தா

அடுத்ததாக நடிகை சமந்தா தனுஷ் உடன் தங்க மகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் இவர்கள் இருவரும் முழு ஈடுபாடுடன் நடித்திருப்பது அனைவரையும் இவர்கள் இடையே ஏதோ தொடர்பு இருக்கிறது என்பதை உணர வைத்தது. மேலும் நிறைய முத்த காட்சிகளிலும் இருவரும் அந்த படத்தில் நடித்திருந்தார்கள். இதனால் நடிகர் நாக சைதன்யா அவருக்கும் சமந்தாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் இருவரும் பிரிந்தார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அனைவரது வாழ்க்கையிலும் விளையாடிய தனுஷின் வாழ்க்கையும் தற்சமயம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தற்சமயம் தனுசை விவாகரத்து செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க- கல்யாணமே பண்ணிக்காம வாழ்க்கையை தொலைத்த ஐந்து நடிகைகள்!!.. இப்படி நடிச்சா எப்படி கல்யாணம் ஆகும்!!..

prakash kumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.