நடிப்பதை தவிர்த்து வேறு தொழில் செய்யும் ஐந்து நடிகைகள்!.. இந்தத் தொழிலையுமா செய்றாங்க!..

Published on: July 10, 2023
Samantha
---Advertisement---

சினிமா நடிகைகள்:

பொதுவாக தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் ஒரு குறிப்பிட்ட வருடத்திற்குள்ளே நடிகைகள் தங்களுடைய திரைப்பட பயணத்தை முடித்துக் கொள்ளும் நிலைமை அனைத்து நடிகைகளுக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை. காரணம் அவர்கள் வயது ஆன பிறகு அவர்களுக்கு திரைப்படத்துறையில் வாய்ப்புகள் குறைந்து விடும் ஆனால் நடிகர்களுக்கு அப்படி கிடையாது என்னதான் நடிகர்களுக்கு 60 70 வயதானாலும் கூட திரைப்படங்களில் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் அந்த இடத்தை தக்க வைப்பதில் தான் திறமை இருக்கிறது.

அந்த வகையில் நடிகைகள் குறிப்பிட்ட சில வருடங்களிலேயே திரைப்படத் துறையில் இருந்து நிறைய சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் நடிப்பதை தவிர்த்து நிறைய நடிகைகள் வேறு சில தொழிலையும் மேற்கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் இன்று நாம பாக்க இருக்க பதிவு திரைப்பட துறையில் பணியாற்றிக் கொண்டே வேறு தொழில் செய்யும் ஐந்து நடிகைகள்.

topsee pannu
topsee pannu

அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது நடிகை டாப்ஸி பண்ணு. டாப்ஸி பன்னு ஆடுகளம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனை அடுத்து இவருக்கு அடுத்தடுத்த தமிழ் சினிமாவில் திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டே இருந்தது இந்த நிலையில் இவர் திரைப்படத் துறையில் இருந்து கொண்டே வேறு ஒரு தொழிலையும் செய்து வருகிறார் அது என்னவென்றால் அவருடைய சகோதரரிடம் சேர்ந்து கொண்டு தி வெட்டிங் ஃபேக்டரி. இந்த கம்பெனியோட வேலை என்னன்னா முக்கியமான செலிபிரிட்டி அவர்களின் வெட்டிங் ஆனிவர்சரியை வீட்டிலேயே டிசைன் செய்து கொடுக்கும் ஒரு நிறுவனம் ஆகும்.

இதையும் படிங்க- தென்னிந்திய சினிமாவில் 1980 களில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. தமிழ், மலையாளம் போன்ற திரைப்படங்களில் முன்னணி…

Nayanthara
Nayanthara

நயன்தாரா:

அடுத்ததா நம்ம பார்க்க இருக்க நடிகையின் பெயர் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா அவர்கள் நயன்தாரா அவர்கள் தற்சமயம் விக்னேஷ் சிவன் அவர்களுடன் திருமணம் ஆகி இரண்டு வருடம் நிறைவடைந்தது இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகளை வாடகத்தாய் மூலம் தத்து எடுத்தார்கள். இது மட்டுமல்லாது நடிகை நயன்தாரா நிறைய திரைப்படங்களிலும் தற்சமயம் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா திரைப்படத் துறையில் இருந்து கொண்டு வேறு தொழிலையும் செய்து வருகிறார். மூன்று விதமான தொழில்களையும் செய்து வருகிறார் அதில் முதலில் தி லிப் லாம் கம்பெனி, இரண்டாவது ப்ரொடக்ஷன் ஹவுஸ் எனும் ரவுடி பிக்சர் கம்பெனியையும் நடத்தி வருகிறார் மூன்றாவதாக சாய்வாளா எனப்படும் நட்சத்திர உணவு விடுதியும் நடத்தி வருகிறார்.

Shrerya saran
Shrerya saran

நடிகை ஸ்ரேயா:

அடுத்த இடத்தில் இருப்பது நடிகை ஸ்ரேயா சரண் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக எனக்கு 20 உனக்கு 18 எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை எடுத்து தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தும் இருக்கிறார்.மேலும் இவர் ஹிந்தி சினி உலகில் நிறைய திரைப்படங்களை தற்சமயம் நடித்துள்ளார். இதனை அடுத்து இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி திரைத்துறையில் இருந்து விடை பெற்றார். இதனை அடுத்து இவர் வேறு தொழிலையும் செய்து வருகிறார் ஸ்ரீ பாண்டனா ஸ்பா எனும் மசாஜ் செய்யும் தொழிலை நடத்தி வருகிறார்.

rakul preet singh
rakul preet singh

அடுத்ததாக ராகுல் ப்ரீத்தி சிங் இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இதனை அடுத்து தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள நடிகையாக இவருக்கு தற்சமயம் போதி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அவருக்கு பிடித்த விஷயமான ஃபிட்னஸ் சம்பந்தமான தொழிலை செய்து வருகிறார்.அவர் எப்பொழுதும் உடம்பை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய ஒரு நடிப்பை ஆவார். ஆதலால் அவர் சம்பந்தமான ஒரு துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kajal agarwal
kajal agarwal

காஜல் அகர்வால்:

இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் இருப்பது நடிகை காஜல் அகர்வால். நடிகை காஜல் அகர்வால் துப்பாக்கி எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய திரைப்பட ங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள காஜல் அகர்வாலுக்கு தற்சமயம் திருமணம் நடந்து முடிந்தது இதனை அடுத்து இவர் சினிமா துறையை தவிர்த்து வேறு சில தொழில்களையும் செய்து வருகிறார். அந்த தொழிலில் பெயர் மார்ஷெல்லா எனும் நகை ஆபரணங்களை விற்கும் ஒரு நிறுவனமாகும்.

இப்படி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழி நடிகைகளும் சினிமாவை தவிர்த்து வேறு சில தொழில்களையும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க- நாலு பேருக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்!.. அசால்ட் பண்ணி வாய்ப்பு வாங்கிய எம்.ஜி.ஆர்..

prakash kumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.