இப்போ தெரியுது.. ரஜினியின் அந்தப் படம் ஏன் பிளாப்புனு? இவர் சொன்ன ஐடியாதானா அந்த கெட்டப்?

Published on: March 18, 2025
---Advertisement---

ரஜினி: ரஜினியை வைத்து எப்படியாவது ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என பலரும் பல வகைகளில் முயற்சித்து வருகிறார்கள் அது சில சமயங்களில் வெற்றியில் கொண்டு போய் முடிகிறது சில சமயங்களில் தோல்விகளில் கொண்டு போய் முடிகிறது அது அவரவருடைய தனி திறமை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு சினிமாவில் ரஜினியின் புகழ் ஓங்கி இருக்கிறது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த சினிமாவில் அவர் அர்ப்பணித்த சாதனைகள் தியாகங்கள் போராட்டங்கள் என சினிமாவிற்கு ஒரு அடையாளமாக காணப்படுகிறார் ரஜினி.

ரஜினியின் பொன்விழா வருடம்:இந்த வருடம் ரஜினியின் பொன்விழா வருடம். சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்காக விழா எடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய இத்தனை வருட வாழ்க்கையில் ஏகப்பட்ட வெற்றிகள் தோல்விகளை சந்தித்திருக்கிறார். இருந்தாலும் ஒரு தலைசிறந்த நடிகராக சூப்பர் ஸ்டாராக மக்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

ரஜினியின் ரசிகர்கள் பெரும்பாலும் அவரை தலைவரே என்றுதான் அழைக்கிறார்கள். ஏன் சினிமாவிலேயே பிரபலங்களாக இருக்கும் பல பேருக்கு அவர் ஒரு தலைவராகத்தான் தெரிகிறார். இந்த நிலையில் பிரபல நடிகர் ஜான் விஜய்க்கு ஒரு சமயம் ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அப்போது கதிர்வேள்னு ஒரு கதையை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்.

ஜான்விஜய் சொன்ன கதை:அது ரஜினிக்கும் பிடித்துப் போயிருக்கிறது. ஆனால் படம் டிராப் ஆனது. அதன் பிறகு பாபா படத்தில் ரஜினி பயன்படுத்திய தொப்பி, கத்தி என ஜான் விஜய் சொன்ன படத்தின் கதைக்காக உருவாக்கப்பட்ட கெட்டப்தானாம் அது. அதை பாபா படத்தில் ரஜினி பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் பாபா படத்தால் ரஜினிக்கு வந்த சோதனையை வாயால் சொல்லவே முடியாது.

ஏகப்பட்ட அடி. பெரும் நஷ்டத்தை தந்த படம். அந்தப் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும் பெரும் நஷ்டம். அதனால் அவர்களுக்கு தன் சொந்தக் காசை போட்டு அவர்கள் நஷ்டத்தை சரி செய்தார் ரஜினி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment