எம்ஜிஆர் மாதிரி சாப்பாடு போட்ட விஜயகாந்த்... அதை சொல்லாம இருக்க முடியாது... பழம்பெரும் நடிகை தகவல்

எம்ஜிஆர், ஜெமினிகணேசன், பாலையா, ரங்கராவ்னு பலருடன் இணைந்து நடித்தவர் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி. எம்ஜிஆர் சொன்ன மாதிரி எங்களுக்குத் தங்க மோதிரம் போட்டார் என்றும் அந்த விஷயத்துல அவரை மாதிரிதான் விஜயகாந்த் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
2 படங்கள் மிஸ்: எம்ஜிஆரை ரொம்ப சின்னப்பொண்ணா இருக்கும்போது ஸ்டூடியோவுலதான் பார்த்தேன். 2 படங்கள் மிஸ் பண்ணினேன். ஆனந்த ஜோதி, எங்கவீட்டுப் பிள்ளை படத்திலும் புக் பண்ணினாங்க. அப்போ தெலுங்கு படத்துல நடிச்சதால நடிக்க முடியாமப் போயிடுச்சு.
நம்நாடு: எனக்கு பரிந்துரை செய்தது வி.என்.ஜானகி அம்மா. எங்க அம்மாவுக்கு ரொம்ப குளோஸ் ப்ரண்டு. அம்மா அவங்ககிட்ட எனக்கு நடிக்கிறதுக்காக வாய்ப்புக்காக கேட்டுருக்காங்க. நம் நாடுல புக் பண்ணிருந்தாங்க. அப்போ எங்க அம்மாவைக் கூப்பிட்டு ராதாம்மா, மரியாதையா நான் நம்நாடுல போட சொல்லிருக்கேன். இந்தத் தடவை டேட் கேன்சல் ஆச்சு. தொலைச்சிடுவேன்னாங்க. அப்புறம் அந்தப் படத்துல நடிச்சேன்.
தங்க மோதிரம்: எம்ஜிஆரு எங்ககிட்ட அரசியல் பிரச்சாரத்துக்காக நாடகம் போடச் சொன்னாரு. இந்த முறை நாம ஜெயிக்கணும். அப்படி ஜெயிச்சா உங்க எல்லாருக்கும் தங்க மோதிரம் போடுறேன். அந்த அளவு மக்களை நாம ஈர்க்கணும்னு சொன்னாரு. நாங்க ஒரு இடத்துல நாடகம் போடுவோம். பின்னாடியே இவரு வந்து கார்ல இறங்குவாரு. அங்க இவரோட பிரச்சாரம் இருக்கும். என்கிறார் குட்டிபத்மினி. மேலும் சாப்பாடு விஷயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் இப்படி சொல்கிறார்.
விஜயகாந்த்: சில இடத்துல சாப்பிடும்போது உட்கார்ந்து பேசுவோம். அவர் ரொம்ப எளிமையானவர். பழகுவதற்கு தங்கமானவர். அவரைப் பற்றி எல்லாருக்குமே தெரியும். சாப்பாடு விஷயத்துல யாருமே இன்டஸ்ட்ரில இனிமே போடுவாங்களான்னு தெரியாது. அப்படியே போட்டதுன்னா விஜயகாந்த் சார் போட்டாரு. அதை சொல்லலாம். சொல்லாம இருக்க முடியாது. எம்ஜிஆர் ஜெயிச்ச உடனே சொன்ன மாதிரி எல்லாரையும் கூப்பிட்டு தங்க மோதிரம் போட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.