விஜய் அப்பாவைக் காப்பாற்றிய உதவி இயக்குனர்... அதிர்ந்து போய் சொன்ன விஷயம்!

இயக்குனர் எஸ்ஏ.சி. தமிழ்த்திரை உலகில் புரட்சிகரமான பல படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவர் தளபதி விஜயின் அப்பா. சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்குத் தண்டனை ஆகிய படங்களை இயக்கியவர்தான் எஸ்ஏசி. இவருடன் உதவி இயக்குனர்களாக பவித்ரன், ஷங்கர், சி.ரங்கராஜன் ஆகியோர் பணியாற்றினர். இவர்கள் அனைவரும் இயக்குனராகி விட்டனர்.
இவர்களில் இயக்குனர் சி.ரங்கராஜன் எஸ்ஏசியுடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது எஸ்ஏசியின் உயிரையேக் காப்பாற்றிய ஒரு சம்பவத்தையும் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் எடுத்துச் சொன்னார். வாங்க பார்க்கலாம்.
ராஜதுரைன்னு ஒரு படம் சார். விஜயகாந்த் சார் நடிச்சாரு. இப்ராஹிம் ராவுத்தர் தயாரிச்சாரு. டைரக்டர் ஆக்ட் பண்ணாரு. அந்தப் படத்தோட பைட் சீனுக்கு ஊட்டியில சூட்டிங் நடந்தது.
ஊட்டில சூட்டிங்: அதை முடிச்சிட்டு ஊட்டியை மேட்ச் பண்றப்ப நம்ம அந்த இடத்துல சூட் பண்றோம். பைட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ். ஒரு ஜீப் வந்து ஒரு ரோப்ல அடிச்சி வரணும். அந்த ரோப்பை கட்டையில அடிச்சி வச்சிருந்தோம். ரெண்டு கேமரா வச்சிருந்தோம். மிக்சடு கேமராவுல விநாயகன் சார் இருந்தாரு. இன்னொரு கேமராவுல ராஜராஜன். எல்லாரும் ரெடி ரெடின்னுட்டாங்க. நானும் டைரக்டர் சாரும் மிட்சல் கேமரா பக்கத்துல நின்னுக்கிட்டு இருக்கோம்.
பயங்கர விபத்து: அப்போ எனக்கு ஏதோ இதுவாகி 'சார் நம்ம அந்தக் கேமரா பக்கத்துல போய் நிப்போம்'னு சொன்னேன். 'ஏன்யா?'ன்னு கேட்டாரு. 'இல்ல சார் அங்க போனா கொஞ்சம் கரெக்டா வியூ தெரியும்'. 'சரி. வாய்யா..'ன்னாரு. அங்கே போய் நின்னோம். அந்த ஜீப்பு மேல ஏறி நேரா மிட்சல் கேமராவுல வந்து அடிச்சது.
அடிச்சி விநாயகன் சார், அங்க ஒரு ஆபரேட்டிங் கேமராமேன் அப்படியே ரொம்ப தூரம் இழுத்துட்டுப் போயிடுச்சு. அப்படியே டைரக்டர் சார் ஒரு மாதிரியா ஆகிட்டாரு. 'ஓ என்னய்யா என்னய்யா தோணுச்சு உனக்கு'ன்னு கேட்டாரு. 'இல்ல சார் ஏதோ இங்க வந்து நிக்கலாம்னு தோணுச்சு'ன்னு சொன்னேன்.
விஜயகாந்த்: அப்படின்னதும் அப்படியே என்னைக் கட்டிப்பிடிச்சிட்டாரு. அப்புறம் உடனே ஸ்பாட்ல இருந்த விநாயகன் சாரைக் கூட்டிட்டுப் போய்..., அவருக்கு இடுப்பு எலும்பு எல்லாம் ரொம்ப டேமேஜ். ஆபரேட்டிங் கேமரா மேன் இதுவா ஆயிட்டாரு. விஜயகாந்த் சார் நைட் புல்லா விஜயா ஆஸ்பிஜட்டல்லயே இருந்து பார்த்துக் கவனிச்சாரு. அப்படி ஒரு சம்பவம். அதனால அதை நினைச்சி டைரக்டர் ரொம்ப பல தடவை ஃபீல் பண்ணிருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராஜதுரை: 1993ல் எஸ்.ஏ.சி.யின் இயக்கத்தில் வெளியான படம் ராஜதுரை. விஜயகாந்த், ஜெயசுதா, சிவரஞ்சனி, பானுப்பிரியா, மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.