கமலிடம் பேசப் பயந்த பாக்கியராஜ்... பாரதிராஜா போட்ட ஆர்டர்... சூப்பர் சீன் ரெடி!

by sankaran v |
கமலிடம் பேசப் பயந்த பாக்கியராஜ்... பாரதிராஜா போட்ட ஆர்டர்... சூப்பர் சீன் ரெடி!
X

பாரதிராஜாவிடம் பாக்கியராஜ் உதவி இயக்குனராக சேர்ந்த படம் பதினாறு வயதினிலே. அப்போ தான் முதன் முதலாக அசிஸ்டண்டா பாக்கியராஜ் சேர்ந்துள்ளார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர்னு யாரு வந்தாலும் பாரதிராஜாதான் படத்தின் கதையைச் சொல்வாராம்.

சப்பாணி: பாரதிராஜா அப்பப்போ கோபப்படுவாராம். அதனால் பாக்கியராஜ் எதுவும் சொல்ல பயந்தாராம். அவரும் பாக்கியராஜிடம் உன்னோட கருத்து ஏதாவது இருந்தா சும்மா சொல்லுன்னு சொல்வாராம். அப்போது பாக்கியராஜ் சார் நீங்க படத்தோட கதையைச் சொல்லும்போது கேட்டுக்கிட்டு இருந்தேன். பிரமாதமா இருக்கு. ஆனா சப்பாணின்னு இவ்ளோ பெரிய கேரக்டரை உருவாக்கி வச்சிருக்கீங்க. ஆனா அந்தக் கேரக்டர் சாதாரணமா பேசுனா நல்லாருக்காது.

என்ன இப்படி சொல்லிட்டே... புரியலையேன்னாரு. இல்ல கிராமத்துக்காரன். சாதாரணமா எல்லாரு மாதிரியும் பேசாம வேற மாதிரி பேசுனா நல்லாருக்கும்னு சொன்னேன். எப்படி சொல்றேன்னாரு. அப்புறம் நான் வந்து 'மயிலு'ன்னு வேற மாடுலேஷன்ல சொல்லி சப்பாணி மாதிரி பேசுனேன்.

ராஜ்கண்ணு ஆடிப்போயிட்டாரு: 'யோவ் இன்னொரு தடவை சொல்லுய்யா'ன்னாரு. அப்புறம் டயலாக் பேசச் சொன்னாரு. ஒவ்வொரு சீனா சொன்னாரு. அப்புறம் தயாரிப்பாளருக்கு பைனான்சியர் ஒருவர் பணம் கொடுக்குறாரு. அவரு வந்து கதை கேட்கணும்னு சொன்னப்போ, என்னைக் கதை சொல்லச் சொன்னாரு. ராஜ்கண்ணு ஆடிப்போயிட்டாரு. அவன் புது பையன்னாரு. அப்புறம் நான் கதை சொன்னதும் தயாரிப்பாளரே அசந்துட்டாரு.

என்னை அவ்ளோ தூரம் டைரக்டர் என்கரேஜ் பண்ணினாரு. முதல் நாளில் கமல் சார் வந்தாரு. அவரு நடிக்கிறாரு. பேப்பரைப் படிக்கிறாரு. டேக் போலாம்னதும் கமல் சார் 'மயிலு'ன்னு சாதாரணமாகத்தான் சொன்னாரு. டேக் முடிஞ்சதும் கமல் சார் 'ஓகே வா'ன்னாரு. டைரக்டர் என்னைப் பார்க்குறாரு.

மாடுலேஷன்: அந்த மாடுலேஷனுக்காக ரீடேக் ஆனது. அப்போ கமல் சார் பாரதிராஜாவையும் என்னையும் பார்க்குறாரு. அப்புறம் கமல் சார் 'இன்னொரு டேக் வாங்கினாலும் இதே தான் சொல்லப்போறேன். என்ன தப்புன்னு சொன்னா தான் எனக்குத் தெரியும்'னாரு. அப்புறம் பாரதிராஜா என் மாடுலேஷனைப் பற்றிச் சொன்னாரு. என்னைப் பார்த்ததும் கமல் என்னைத் தனியா அழைச்சிட்டுப் போய் விவரத்தைக் கேட்டார்.

கமல் டயலாக்: நான் பயந்து போய்ட்டேன். அப்புறம் நான் சொல்லிக் கொடுத்த மாதிரியே அவர் கேட்டுக்கிட்டாரு. டைரக்டர்கிட்ட வந்து டேக் சொல்லி அப்படியே பிரமாதமா நடிச்சாரு. அதே போலத் தான் பரட்டை ரஜினியிடம் கமல் பேசிய 'சந்தைக்குப் போணும். ஆத்தா வையும். காசைக் கொடு' டயலாக்கும் உருவானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story