24 மணி நேரமும் மழை வரும்..இப்படி ஒரு வீடா? தேவயாணி வீட்டில் ஒளிந்திருக்கும் ரகசியம்

முன்னணி நடிகை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைவருக்கும் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் தேவயாணி. காதல் கோட்டை திரைப்படம்தான் அவரை இந்த சினிமா உலகிற்கு அடையாளம் காட்டியது. ஆரம்பத்தில் சிவசக்தி என்ற படத்தில் ஒரு ஐட்டம் ஆடலுக்கு நடனம் ஆடியிருப்பார் தேவயாணி. அதன் பிறகு ரேவதி நடிப்பில் வெளியான தொட்டாச்சிணுங்கி படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருப்பார்.
சரியான முடிவு: அந்த கேரக்டரில் நடித்தது மிகப்பெரிய தவறு என்றும் ஒரு காலத்தில் தேவயாணி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.அதுமட்டுமில்லாமல் சிவசக்தி படத்தில் ஐட்டம் ஆடலுக்கு நடனமாடியதால் தொடர்ந்து அந்த மாதிரி பாடலுக்கு ஆட தான் வாய்ப்பு வந்தது. நல்ல வேளை அப்படி ஒரு வாய்ப்பை பயன்படுத்தவில்லை. இல்லையென்றால் என் கெரியரே ஸ்பாயில் ஆகியிருக்கும் என்றும் ஒரு பழைய பேட்டியில் தேவயாணி கூறியிருந்தார்.
காதல் கோட்டை: அதன் பிறகு தான் அஜித் தேவயாணி காம்போவில் காதல் கோட்டை திரைப்படம் வெளியானது. இந்தப் படம் இருவருக்குமே ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்த படமாக மாறியது. அதிலிருந்து தேவயாணியின் கிராஃப்ட் அப்படியே உயர்ந்தது. ஒரு பக்கம் அஜித் , விஜய், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் தேவயாணி.
சூர்யவம்சம்: சூர்யவம்சம் படத்திற்கு பிறகுதான் தேவயாணிக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ராஜகுமாரன் இரண்டு படங்களை மட்டும்தான் இதுவரை தயாரித்திருக்கிறார். ஒன்று தேவயாணி முரளி நடிப்பில் வெளியான காதலுடன் திரைப்படம். அந்தப் படம் ஓரளவுதான் நஷ்டத்தை கொடுத்தது.
அதன் பிறகு ராஜகுமாரனே ஹீரோவாக நடித்த திருமதி தமிழ் என்ற படத்தையும் ராஜகுமாரன் தான் தயாரித்தார். இதில் ராஜகுமாரனுக்கு ஜோடியாக தேவயாணி நடித்திருந்தார்.ஆனால் இந்த படம் மிகப்பெரிய ஃபிளாப் ஆனது. இந்த தோல்வி பயத்தால் ராஜகுமாரன் அவரது சொந்த ஊரில் ஒரு ஃபார்ம் ஹவுஸை கட்டினாராம். பயத்தால் சில பேர் விரக்தியில் இருப்பார்கள்.
ஆனால் தோல்வியால் சொத்துக்களை வாங்கி போட்டேன் என்று கூறினார். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவெனில் அந்த ஃபார்ம் ஹவுஸில் மழை வேண்டும் என்று சொன்னால் மழை வந்துவிடுமாம். எப்படியெனில் வீட்டின் மேற்கூரையில் மோட்டார் பம்ப் செட் செய்திருக்கிறார் ராஜகுமாரன். தோட்டத்தில் எல்லா பக்கமும் நீர் பாய்ச்ச ஒரு ஒரு சுற்றும் குழாய் வைத்திருப்பார்கள். அதை போல் ராஜகுமாரனும் மேற்கூரையில் அப்படி ஒரு செட்டப் செய்திருக்கிறார். மழை வேண்டும் என்றால் அந்த ஸ்விட்ச் ஆன் செய்து விடுவாராம். உடனே மேலிருந்து எல்லாப் பக்கமும் தண்ணீர் வருகிறது.