கமலுடன் நடிச்சவரு… ரஜினியுடன் ஏன் நடிக்கல? அவமானப்படுத்தப்பட்டாரா கேப்டன்?

Published on: March 18, 2025
---Advertisement---

மூவேந்தர்கள்:

தமிழ் சினிமாவில் 80கள் காலத்தில் முப்பெரும் வேந்தர்களாக திகழ்ந்தவர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த். இதில் கமல் சீனியராக இருந்தாலும் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரஜினியும் விஜயகாந்தும் மக்கள் மத்தியில் பாப்புலராக மாறினார்கள். அதிலும் குறிப்பாக விஜயகாந்த் ரஜினி கமல் பீக்கில் இருக்கும்போது தான் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் துணை நடிகராக வில்லன் நடிகராக ஒரு சில படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோவாக மாறியவர் விஜயகாந்த்.

எழுச்சிமிக்க வசனங்களை பேசி குறுகிய காலத்தில் மக்களை வெகுவாக கவர்ந்தார். இவருடைய படங்களில் பெரும்பாலும் வீர வசனங்கள் அதுவும் போராட்டம் பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எந்த அளவு பாதிக்கப்படுகிறது என்பதை பற்றியுமே இருக்கும். அதனாலேயே மக்களுக்காக குரல் கொடுக்கும் நாயகனாகவே இவர் பார்க்கப்பட்டார்.

ரஜினியுடன் ஏன் நடிக்கவில்லை?:

அந்த ஒரு காரணத்தினால் தான் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக விஜயகாந்தை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்த விஜய்காந்த் கேப்டனாக இன்றுவரை வாழ்ந்து வருகிறார். இன்று அவரை ஒரு தெய்வமாகவே மக்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கமலுடன் நடித்த விஜயகாந்த் ஏன் ரஜினியுடன் நடிக்கவில்லை என்பதற்கான ஒரு காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் இதைப்பற்றி தெளிவாக கூறியிருக்கிறார். அதாவது ஈகோ இல்லாத ஒரு முன்னணி நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். ஆனால் நிறைய அவமானங்களை அவர் சந்தித்தார். உதாரணமாக மனக்கணக்கு என்ற படத்தில் கமலுடன் நடித்திருக்கிறார் விஜயகாந்த். கமலுடன் நடித்தவர் ஏன் ரஜினியுடன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு ரஜினியுடனும் கேள்விக்கு என்ன பதில் என்ற படத்தில் 1978ல் ரஜினிக்கு தம்பியாக நடித்தார் விஜயகாந்த்.

மிகப்பெரிய ஆளுமை விஜயகாந்த்:

vijayakanth

vijayakanth

ஆனால் மூன்று நாட்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு பேச்சு சரியாக தெளிவாக வராததால் அந்த படத்தில் இருந்து அவர் விலக்கப்பட்டார் என்ற ஒரு தகவல் தான் இருக்கிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடித்தார். இப்படி பல அவமானங்களை படிக்கட்டுகளாக மாற்றி ஒரு மாபெரும் தலைவராக இருக்க முடிந்தது என்றால் அது விஜயகாந்தால் மட்டும் தான் முடியும் என அந்த பத்திரிகையாளர் கூறியிருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment