ரீமேக்கா...அதிலும் கமல்தான் பெஸ்ட்... அசல் எல்லாம் கெட் அவுட்தான்..!

வழக்கமாக ரீமேக் படங்கள் என்றால் அசல் படங்கள்தான் கெத்தாக இருக்கும். அதைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள் சில சமயம்தான் ஹிட் அடிக்கும். ஆனால் கமல் படங்களைப் பொருத்தவரை அசல் படங்களைவிட சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. என்னன்னனு பார்க்கலாமா...
கமல் நடித்த படமான அன்பே சிவம், அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் ரீமேக் படங்கள்தான். ஆனால் எந்தப் படத்தில் இருந்து ஒன்லைனை எடுத்தார்களோ அதை விட பெஸ்டா கொடுத்து இருப்பது கமல் படங்கள்தான்.
அவ்வை சண்முகி: அந்தளவுக்கு பர்பார்மன்ஸ் கமல் படங்களில் இருக்கும். 1996ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், மீனா நடித்த படம் அவ்வை சண்முகி. இந்தப் படத்தில் பாட்டி வேடத்தில் கமல் தத்ரூபமாக நடித்துள்ளார்.
கிரேசிமோகனின் காமெடியில் படம் பட்டையைக் கிளப்பும். இந்தப் படம் மிஸ் டபுட்பயர் என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் தழுவல் என்றே சொல்லலாம். ஆனால் அந்தப் படத்தையும் கமல் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கமல் படம்தான் பெஸ்டாக இருக்கும். அந்தளவுக்கு காமெடியிலும், நடிப்பிலும் அமர்க்களம் பண்ணி இருப்பார் கமல்.
படத்தில் ஜெமினிகணேசன், மணிவண்ணன், நாகேஷ், நாசர், டெல்லிகணேஷ் ஆகியோரின் நடிப்பும் அசத்தலாக இருக்கும். ரமேஷ் அரவிந்த் சிறப்புத்தோற்றத்தில் வருவார். தேவாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதம்.
அன்பே சிவம்: அதே போல 2003ல் வெளியான படம் அன்பே சிவம். சுந்தர்.சி.யின் இயக்கத்தில் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தை ஆரம்பத்தில் கொண்டாடாதவர்கள் இப்போது கொண்டாடுகிறார்கள் என்பதுதான் விசேஷம்.
இந்தப் படத்துக்கு பிரபல கார்டூனிஸ்ட் மதன் வசனம் எழுதியுள்ளார். கமல், மாதவன் நடிப்பில் படம் பட்டையக் கிளப்பியது. வித்யாசாகரின் இசையில் பாடல்களும் அற்புதம். இந்தப் படமும் 1987ல் வெளியான பிளேன்ஸ், டிரெய்ன்ஸ் அண்டு ஆட்டோமொபைல்ஸ் படத்துடன் ஒப்பிடப்படுகிறது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ்: அந்தப் படத்தில் நாயகன் ஒரு எரிச்சல் ஊட்டும் மனிதனை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் லைன். அதிலும் கமல்தான் கெத்து காட்டி இருப்பார். அதே போல வசூல்ராஜா எம்பிபிஎஸ் படமும் முன்னாபாய் எம்பிபிஎஸ் என்ற இந்திப் படத்தின் ரீமேக்தான். ஆனால் அந்தப் படத்தை விட கமல் படம்தான் சக்கை போடு போட்டு விட்டது.