Connect with us

கண்ணதாசன் குடிச்சிட்டாருன்னா அதை மட்டும் செய்யவே மாட்டாராம்… இதுவரை வெளிவராத தகவல்!

latest news

கண்ணதாசன் குடிச்சிட்டாருன்னா அதை மட்டும் செய்யவே மாட்டாராம்… இதுவரை வெளிவராத தகவல்!

கவியரசர் கண்ணதாசன் அன்றாடம் செய்யக்கூடிய விஷயங்களை அவரது மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார்.

கண்ணதாசன் சாருடைய ஒருநாள் பொழுது எப்படி கழியும் என கேட்கிறார். அதற்கு அண்ணாத்துரை கண்ணதாசன் சொன்ன பதில் இதுதான். காலையில 7 அல்லது 7.30 மணிக்கு எழுந்து விடுவார். வாசலில் உள்ள சேரில் அமர்ந்து பேப்பர் படிப்பார். டீ சாப்பிட்டுக் கொண்டு சிகரெட் பிடிப்பார். அப்படியே 9 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புவார். எங்கே போறாருன்னே தெரியாது.

வேலை இல்லன்னா கவிதா ஹோட்டல். இல்லன்னா கம்பெனி. முன்னாடி லைனா கார்கள் நிற்கும். அதுல கம்போஸ் இருந்துச்சுன்னா காரில் ஏறி போயிடுவார். எந்தக் கம்போஸிங் போறாருன்னு தெரியாது. எங்கே இருந்தாலும் வீட்டுக்கு மத்தியானம் சாப்பிட வந்துடுவாரு. வந்ததும் சாப்பிட்டுட்டுப் படுத்து தூங்கிடுவாரு.

கடைசியா 73, 74ல் தான் மத்தியானம் ஒரு பெக் குடிக்க ஆரம்பிச்சாரு. டிரிங்ஸ் குடிச்சிட்டு சாப்பாடு சாப்பிட்டு படுத்து தூங்கிடுவாரு. குடிச்சிட்டு லைஃப்ல வெளியே போனதே கிடையாது. காலையிலும் சரி. நைட்டும் சரி. குடிச்சாருன்னா தூங்கிடணும். அவரு வெளியே போகவே மாட்டாரு. மீட்டிங்கும் போக மாட்டாரு. தூங்கிட்டாருன்னா திருப்பி சாயந்திரம் எழுந்துருச்சி கம்போஸிங் போயிடுவாரு.

நைட் வரும்போது 11 மணி ஆகிடும். எல்லாரையும் எழுப்பி எல்லாரும் ஓட்டலுக்குப் போங்கன்னு சொல்லி அனுப்பி வச்சிடுவாரு. இது அவரோட ரெகுலர் ரொட்டீன் லைஃப். வெளியூர் போறதா இருந்தாலும்கூட 2 நாளைக்கு மேல இருக்க மாட்டாரு. வீட்டுக்கு வந்துடணும். பிள்ளைகளைப் பார்க்கணும்னு நினைப்பாரு.

மேக்சிமம் 2 அல்லது 3 நாள்களுக்கு மேல வெளியூருல இருந்தது கிடையாது. அவ்ளோ பாசமா இருப்பாரு. நாங்க 14 பிள்ளைகள். ஒண்ணா தான் வளர்ந்தோம். அதுல எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டாரு. ரொம்ப ரகளை நான். அது ஒரு ஸ்டேஜ்ல எனக்கு அட்வான்டேஜா மாறிடுச்சு. அதனால என்னை வெளியே அடிக்கடி கூட்டிட்டுப் போயிடுவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top