அப்பாவா நடிச்சவரு அதுக்கு கூப்பிட்டாரு.. குட்டிபத்மினி சொன்ன ஷாக்கிங் தகவல்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின் ஆக குணச்சித்திர நடிகையாக தற்போது தயாரிப்பாளராக இருந்து வருபவர் நடிகை குட்டி பத்மினி. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இவர் சினிமாவில் இருந்து வருகிறார். எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் என அனைவரின் படங்களிலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். கமலுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்ல தெலுங்கு படத்திலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் குட்டி பத்மினி. இவர் ஒரு பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து அவருக்கு நடந்த அனுபவத்தை பற்றி விளக்கி இருக்கிறார். அதாவது எனக்கு அப்பாவாக நடிச்சவரே என்னை கூப்பிட்டு இருக்கிறார். அவர் யார் என்று சொல்ல முடியாது. எனக்கு அப்பாவாக நடிச்சவர்கள் யார் யார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என கூறினார்.
அது மட்டுமல்ல ஒரு படத்திற்காக நடிக்க வேண்டும் என இவரை அழைத்துக் கொண்டு போய் அன்று இரவு டைரக்டருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார்கள். அப்போது குட்டி பத்மினி பயந்து அதே ஹோட்டலில் ராதா தங்கி இருந்தாராம். ராதாவின் அறைக்கு சென்று ராதா எனக்கு இந்த மாதிரி ஒரு சூழ்நிலை. என்னிடம் காசு கிடையாது. அதனால் எனக்கு பணம் இருந்தால் கொடு .நான் எப்படியாவது சென்னைக்கு போய் அங்கிருந்து இந்த பணத்தை உனக்கு நான் திருப்பி தந்து விடுகிறேன் எனக் கூறினாராம்.
உடனே ராதா அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். என்னுடைய மேனேஜர் உனக்கு டிக்கெட் போட்டு தருவார் என சொல்லி ராதாவின் உதவியுடன் சென்னைக்கு வந்தாராம் குட்டி பத்மினி. அதன் பிறகு குட்டி பத்மினி தயாரிப்பாளரான உடன் எந்த டைரக்டர் இவரை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தாரோ அவரின் மகள் ஸ்கூல் பீஸ் கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்ததை அறிந்த குட்டி பத்மினி அந்த இயக்குனரை அழைத்து ரெண்டு சீரியல்கள் இயக்கும் பொறுப்பை கொடுத்து அவரின் மகளுக்கு ஸ்கூல் பீஸையும் கட்டினாராம் குட்டி பத்மினி.
அதைப்போல இயக்குனர் மகேந்திரனும் ஒரு கட்டத்தில் குட்டி பத்மினி வறுமையில் இருக்கிறார் என அறிந்ததும் நண்டு என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டர் ரோலை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். இந்த ஒரு நன்றி கடனுக்காக மகேந்திரன் ஒரு காலத்தில் வறுமையில் வாடும் பொழுது தூர்தர்ஷனில் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாகவும் அவருக்கு நான் 5 லட்சம் கொடுத்தேன் என்றும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் குட்டி பத்மினி.