போக்கிரி படத்தில் கைல வெட்டு, கன்னத்துல அறை... மறக்க முடியாத நடிகை!

படத்துல நடிக்கும்போது எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் சில சமயங்களில் அது நமக்கே ஆபத்தாக முடிந்து விடுவதுண்டு. கர்ணம் தப்பினால் மரணம் என்று ஸ்டண்ட் நடிகர்களைச் சொல்வாங்க.
சாதாரணமாகவே அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் இது பொருந்தும். அந்த வகையில் ஆக்ஷன் மசாலா படமான போக்கிரியில் தனக்கு நடந்த மறக்க முடியாத 2 சம்பவங்கள் குறித்து நடிகை ஸ்ரீரஞ்சனி பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
மடிசார் மாமி: நடிகை ஸ்ரீரஞ்சனி அம்மா கேரக்டர்ல நடிக்கும்போது கிடைத்த சில மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார.; வாங்க பார்க்கலாம். அந்நியன் படத்துல சதாவுக்கு அம்மா கேரக்டராக நடிக்க வைத்தார் ஷங்கர். அதுல மடிசார் மாமி கெட்டப். ரொம்ப எனக்குப் பிடிச்சிருந்தது. அதே மாதிரி போக்கிரி படத்துல ஒரு நெகடிவ் ஷாட்.
கன்னத்துல அறை.. : அதுல அசின் வந்து வீட்டுக்குள்ள பூட்டுவாங்க. நான் பதறுவேன். கதவைத் திறந்ததும் ஒரு பைட்டர் வேகமாக என்னை அடிப்பார். பிராக்டிஸ் பண்ணும்போது கரெக்டா கை படாம அடிச்சாரு. ஆனா ஆக்ஷன் ஷாட்ல இருக்குற ஹைட்டுக்கு அறைஞ்ச அறைல நானே படார்னு சுவர்மேல போய் மோதிட்டேன். மை காட். ஒரு செகண்ட் எனக்கு அப்படியே ஸ்டார்ஸ்ஸா பார்க்குற மாதிரிதான் ஆகிடுச்சு.
விரலை வெட்டிட்டேன்: அப்புறம் பிரபுதேவா சார் ஓடிவந்து ஆர் யு ஓகேன்னாரு. அது ஒண்ணு நடந்துச்சு. அதே படத்துல ஒரு கிட்சன் ஷாட். அசினைப் பார்த்துட்டே 'யம்மா காலேஜ்க்கு இன்னும் கிளம்பலையா'ன்னு வரும்.
குடமிளகாயை வச்சி அதைக் கட் பண்ணி நான் கேட்கணும். விரலை வெட்டிட்டேன் அப்படி. ரத்தத்தைப் பார்க்குறேன். மயக்கம் வந்துட்டு. அந்தப் படத்துல இந்த ரெண்டும் நடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
போக்கிரி: 2007ல் விஜய், அசின், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்த படம் போக்கிரி. இந்தப் படத்தின் இயக்குனர் பிரபுதேவா. மணிசர்மா இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின.