குடிசை வீட்டில் வாழ்க்கை!.. இப்போதும் அதை மறக்காத ரஜினி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா!..

Published on: March 18, 2025
---Advertisement---

Rajinikanth: இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர்தான் ரஜினிகாந்த். தோனி, சச்சின் தெண்டுகல்கர், ஷாருக்கான் கூட அவரை ‘தலைவா’ என அழைக்கிறர்கள் என்றால் கடந்த 50 வருடங்களில் அவர் உருவாக்கி வைத்திருக்கும் அந்த இமேஜ். அதற்காக அவர் போட்ட உழைப்பு. இப்போது தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு அவரிடம் பணம் இருக்கிறது.

சினிமாவில் வாய்ப்பு: ஆனால், அவரின் துவக்கம் அப்படி இல்லை. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்தவர். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் நண்பரின் துணையோடு சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் சேர்ந்து பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து நடிகரானவர். அந்த வாய்ப்பு கிடைக்கும் வரை அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல.

மாத வாடகைக்கு மிகவும் சின்ன அறையில் தங்கியிருக்கிறார். பகலில் அந்த அறையில் இருக்கவே முடியாது. ஏனெனில், கீழே ஹோட்டலுக்காக சமைப்பார்கள் என்பதால் அறை சூடாகவே இருக்குமாம். எனவே, வெளியே சுற்றிவிட்டு இரவில் மட்டுமே அறைக்கு வருவாராம் ரஜினி. ஈரத்துணியை கீழே விரித்துதான் தூங்குவாராம்.

குடிசை வாழ்க்கை: மேலும், ராயப்பேட்டையில் ஒரு குடிசையில் நண்பர்களுடன் அவர் தங்கியிருந்தது பலருக்கும் தெரியாது. பின்னாளில் ரஜினியை வைத்து பல படங்களை இயக்கி அவரை ஸ்டார் நடிகராக மாற்றிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

ராயப்பேட்டையில் குடிசையில் தங்கியிருந்தார் ரஜினி. நானே அங்கு சென்று அவரிடம் கதையை சொல்லி கால்ஷீட் வாங்கி வருவேன். பின்னாளில் அவர் வளர்ந்து போயஸ்கார்டனில் வீடு கட்டியபோது என்னை ஒரு நாள் சாப்பிட அழைத்தார். வீட்டின் மொட்டை மாடியில் ஒரு குடிசை இருந்தது. ‘இதை ஏன் அகற்றாமல் வைத்திருக்கிறாய்?’ என அவரிடம் கேட்டேன்.

‘சார் பழச மறந்துட்டீங்களா!. நான் குடிசையிலதான் இருந்தேன். எவ்வளவு வசதி வந்தாலும் பழச மறக்கக்கூடாதுன்னுதான் இதை வச்சிருக்கேன். என சொல்லி அன்று அதில்தான் சாப்பிட்டார். சில சமயம் அதில் படுத்து தூங்கவும் செய்வார். இதுதான் உண்மையான ரஜினி’ என பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment