Guna Tamil movie: கமல்ஹாசனின் நடிப்பில் 1991ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் குணா. கமலின் நண்பர் சந்தானபாரதி இயக்கிய திரைப்படம் இது. இந்த படத்தில் ரேகா, ஜனகராஜ், பின்னணி பாடகர் எஸ்.பி.பி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ரோஷ்ணி என்கிற புதுமுகம் நடித்திருந்தார்.
இந்த படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக கமல் நடித்திருந்தார். தன்னை சிவனாக நினைத்துக்கொண்டு கதாநாயகியை கடத்திக்கொண்டு போய் கொடைக்கானல் மழையில் ஒரு இடத்தில் அடைத்து வைத்திருப்பார். துவக்கத்தில் கமலிடமிருந்து தப்பிக்க நினைத்தாலும் ஒருகட்டத்தில் அவரின் அன்பை புரிந்துகொண்டு அவரோடு வாழ கதாநாயகி முடிவெடுப்பார்.
ஒருபக்கம், பணக்காரியான அவரின் சொத்துக்களை அபகரிக்க ஒரு கூட்டம் அவரை தேடி வரும். அதேபோல், கமலை பிடிக்க போலீஸ் அதிகாரிகளும் அங்கே வர என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் அற்புதமான பாடல்களை போட்டு கொடுத்தார் இளையராஜா.
அதிலும் ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. குணா படத்தில் இடம் பெற்ற குகை மற்றும் கண்மணி பாடலை வைத்துதான் மஞ்சுமெல் பாய்ஸ் என்கிற படத்தை எடுத்தார்கள். 20 கோடி செலவு செய்து 200 கோடி வரை சம்பாதித்தார்கள். அதனால்தான், தனது அனுமதியில்லாமல் அந்த பாடலை பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா.
குணா படத்தில் கதாநாயகியாக நடித்த ரோஷ்ணி அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார். அதோடு அவரின் அழகும் அந்த படத்திற்கு சரியாக இருந்தது. அதேநேரம், அந்த படத்திற்கு பின் ரோஷ்ணி வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை. ரோஷ்ணி உண்மையிலேயே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.
பொழுது போக்கிற்காகவே மும்பையில் ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்துகொண்டிருந்தார். கதாநாயகியை தேடி மும்பை சென்றபோது இவரை ஒருவர் பரிந்துரை செய்திருக்கிறார். அவரை பார்த்த இயக்குனருக்கு இவர்தான் சரியாக இருப்பார் என்று தோன்றவே ரோஷ்ணி அந்த படத்தில் நடித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…