Categories: latest news

அப்படி பாய்ஞ்சா நெருப்பு பத்திக்காதா? விஜய் கேட்ட கேள்வி… நீங்க ஹீரோ சார்னு சொன்ன ஜாக்குவார்

தமிழ்த்திரை உலகில் பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் விஜய் உடனான தனது அனுபவங்கள் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

விஜய் சார் கேட்ட உடனே டக்குன்னு புரிஞ்சிக்குவாரு. கிக் நல்லா அடிப்பாரு. ஃபைட்டர்ஸ்சுக்கே அது தெரியாது. டெம்போலேன்னு ஒண்ணு வந்துச்சு. மிதிச்சிட்டா எங்கே போதுன்னே தெரியாது. அற்புதமா பண்ணுவாரு. விஜய் அப்பா எஸ்ஏசி அற்புதமான மனிதர். அவரால எல்லாரையுமே டிரெய்ன் பண்ண முடியும். விஜயகாந்தை நல்லா கொண்டு வந்தாரு. அது ஊருக்கே தெரியும்.

அது மாதிரி பையனை வளர்க்க என்ன கஷ்டப்பட்டாருன்னு ஊருக்கே தெரியும். அவரோட வளர்ப்பு சரியான வளர்ப்பு. எந்த இதுக்கும் ஆசை வராம தன் புள்ளை நல்லா வரணும்னு நினைச்சவரு அவரு. அது மாதிரி அந்த புள்ளையும் அப்படி இருக்காரு. அவ்ளோதான். அந்த மாதிரி இருக்கும்போது நிச்சயமா எல்லா இதுலயும் ஜெயிப்பாரு.

மைலாப்பூர்ல பிரியமுடன் சூட்டிங் நடக்கு. விஜய் சார் ஓடிப்போற மாதிரி சீன். ‘ஐயோ விஜய் சாரை நான் பார்த்துட்டேன்’னு துள்ளிக் குதிச்சது. நான் ‘ஹலோ சொல்லுங்க சார்’னு சொன்னேன். முதல்ல ‘சும்மா இருங்க சார்’னு சொன்னாரு. நானும் ‘சும்மா போய் சொல்லுங்க சார். அது ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டு இருக்கு’ன்னு சொன்னேன். அப்புறம் கைகொடுத்து ஹலோ சொன்னாரு. அந்தப் பொண்ணு ‘ஐய்யோ விஜய் சார் எங்கிட்ட பேசிட்டாரு’ன்னு சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சது.

பகவதி படத்துல பைக் ப்ரண்டு வீல் துக்குறது… பேக் வீல் தூக்குறதுன்னு அதுல தான் பர்ஸ்ட் வச்சிருந்தோம். இந்தியாவுலயே அதுதான் பர்ஸ்ட். அதுக்கு சில செட்டப்லாம் பண்ணி ரொம்ப பிரமாதமா பண்ணினாரு. எதிரி வந்து பெட்ரோல் குண்டு வீசுவான். பெட்ரோல்ல எரிஞ்சிக்கிட்டு இருக்கும். நான் வந்து உள்ளே நுழையணும். நான் பண்ணிக் காட்டுனேன்.

நெருப்பு வழியா நுழைஞ்சி வந்துட்டேன். அப்புறம் மானிட்டர்ல பார்த்ததும் விஜய் சார்கிட்ட சொன்னேன். என்ன ஃபயர் ஷாட்டான்னு கேட்டாரு. ‘நான் ஹீரோ சார்’னாரு. ‘ஆமா. நீங்க தான் பண்ணனும்’னாரு. ‘நெருப்பு ஆகிடுச்சுன்னா என்ன பண்றது மாஸ்டர்?’னு சொன்னாரு. ஒண்ணும் ஆகாது.

‘நான் பண்ணிட்டேன்’னு சொன்னேன். அப்புறம் பார்த்துட்டு எதுனாவது ஒண்ணு ஆவணும். அப்போதான் இருக்குன்னு உரிமையா கோவிச்சிக்கிட்டாரு. அப்புறம் இருங்க சார்னு நான் பண்ணிக்காட்டுனேன். அது செங்கல்பட்டுல நடந்த சூட்டிங். விஜய் அதே மாதிரி பண்ணினாரு. சுற்றி நிற்கிற கூட்டம் கைதட்டுனாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago