வாயை விட்டு அடி வாங்கி மயங்கி விழுந்த மன்சூர் அலிகான்!.. விஜயகாந்த் பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!..

Mansoor Ali Khan
Mansoor alikhan: திரைத்துறையில் டெரரான துறைதான் சண்டை பயிற்சி அமைப்பது. ஒவ்வொரு ஸ்டண்ட் இயக்குனரிடமும் பல சண்டை கலைஞர்கள் இருப்பார்கள். சண்டை பயிற்சி யூனியனில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் குடும்பங்கள் இருக்கிறது. தமிழ் திரையுலகில் உருவாகும் 90 சதவீத படங்களில் சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. எனவே, அதை நம்பியே பல கலைஞர்கள் இருக்கிறார்கள்.
ஸ்டண்ட் நடிகர்கள்: அதேசமயம் ஸ்டண்ட் நடிகர்களின் வாழ்க்கை எப்போதும் ரிஸ்க் நிறைந்ததாகவே இருக்கிறது. சண்டை காட்சி படமாக்கப்படும்போது ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் சில நடிகர்கள் உயிரையும் விட்டிருக்கிறார்கள். ஷங்கரின் அந்நியன் படம் உருவாகும்போது சண்டைக்காட்சியில் 2 பேர் இறந்து போனார்கள். அதேபோல், ரிஸ்க்கான காட்சிகளில் நடித்து பலருக்கும் கை, கால்கள் போயிருக்கிறது.
ஷூட்டிங் நடக்கும்போது யாரிடம் கோபத்தை காட்டினாலும் ஹீரோக்கள் ஸ்டண்ட் நடிகர்களிடம் கோபத்தை காட்டமாட்டார்கள். ஏனெனில், அடிப்பது போல் நடிக்கும்போது உண்மையாக அடித்துவிடுவார்கள். இது பல நடிகர்களுக்கும் நடந்திருக்கிறது. ரஜினியின் குசேலன் படத்தில் கூட வடிவேலுவை இப்படித்தான் போட்டு பொளப்பார்கள்.
கேப்டன் பிரபாகரன் வாய்ப்பு: அந்தவகையில், ஸ்டண்ட் நடிகர்களிடம் மன்சூர் அலிகான் அடி வாங்கிய நிகழ்வு பற்றி பார்ப்போம். ஸ்டண்ட் நடிகர், நடன நடிகர் என பல வேலைகளை செய்து வந்த அவரை கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக்கினார் விஜயகாந்த். மன்சூர் அலிகான் கொஞ்சம் வாய் பேசுவார்.
அந்த படத்திலேயே அப்படி ஸ்டண்ட் நடிகர்களிடம் வாய் பேசியிருக்கிறார். ஒரு சண்டை காட்சியில் ஸ்டண்ட் நடிகர்கள் சுற்றி வளைத்து அவரை உண்மையிலேயே அடித்து விட்டார்களாம். அவர்கள் அடித்ததில் மன்சூர் அலிகான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாராம். அதன்பின்னர்தான் ஸ்டண்ட் நடிகர்களிடம் அதிகம் பேசக்கூடாது என்கிற முடிவை எடுத்திருக்கிறார் மன்சூர் அலிகான்.