Categories: latest news

சான்ஸ் கொடுத்த அப்பாவையே இளையராஜா திட்டிட்டாரு… டிஎம்எஸ் மகள் சொன்ன ஷாக் நியூஸ்!…

பிரபல பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தரராஜன் இளையராஜாவுக்கு கொடுத்த வாய்ப்புகள், பின்னாளில் இளையராஜாவுக்கும் அவருக்கும் நடந்த சண்டை என பல்வேறு விஷயங்களை டிஎம்எஸ்.மகள் மல்லிகா தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

அப்பா இளையராஜாவை அடிக்கடி பாராட்டுவாரு. அந்தப் பையன்கிட்ட நல்ல திறமை இருக்குன்னு சொல்வாரு. இங்க வந்து இளையராஜா கித்தார், கீபோர்டு எல்லாம் வாசிச்சிக்கிட்டு இருப்பாரு. அதே மாதிரி இங்க வந்து சான்ஸ் கேட்டு இளையராஜா எல்லாம் நிப்பாங்க. அப்படி சான்ஸ் கேட்ட இளையராஜா எங்க அப்பாவை ஒருமுறை திட்டி விட்டுட்டாரு. ஏதோ சொல்லி சண்டை போட்டுட்டாரு. ‘இனிமே எல்லாம் சான்ஸ் கொடுக்க முடியாது’ன்னு சொல்லிருக்காரு.

எம்எஸ்.விஸ்வநாதன் சாருக்கிட்ட சொன்ன மாதிரி ‘இப்படி எல்லாம் பண்ணினா நல்லாருக்கும்பா’ன்னு இளையராஜா கிட்ட அப்பா சொல்லிருக்காரு. அதுக்கு ‘இங்க நான்தான் மியூசிக் டைரக்டர். நான் சொல்ற மாதிரிதான் நீங்க பாடணும். அங்க பாடுனேன். இங்கே பாடுனேன்கறத எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். நான் என்ன சொல்றேனோ அதைத்தான் நீங்க பாடணும்’னு கடுமையா திட்டிட்டாரு.

உடனே அப்பாவும் ‘சரி’ன்னாரு. அதுக்கு அப்புறம் அப்பா பாடவே இல்லை. அவரும் அதுக்கு அப்புறம் ரெக்கார்டிங்குக்கு எல்லாம் கூப்பிடவே இல்லை. எங்க அப்பாவே, ‘நான் நல்லா பாடவே இல்லை. என்னை விட்டுருப்பா’ன்னு இளையராஜாகிட்டயே சொல்லிட்டாரு.

அதுக்கு அப்புறம் பார்க்கும்போது எல்லாம் ‘ஆகா, ஓகோ’ன்னு பேசுவாரு. பின்னாடி எப்படியோ தெரியாது. ஆனா எங்க அப்பா எப்பவுமே சொல்வாங்க. நல்லா வருவான் அவன். நல்லா பாடுவான். என்னமோ போதாத நேரம். அவ்ளோதான்னாரு.

எங்க அப்பாவுக்குக் கை நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. சுகர் இருக்குறதால ரொம்ப ஹைபிட்ச்ல பாடிப் பாடி காது கேட்காமப் போயிடுச்சு. அந்த நேரம்தான் இளையராஜாவோட சண்டை எல்லாம் வந்தது. அப்புறமா மெஷின் வச்சிக்கிட்டாரு என்கிறார் மல்லிகா.

டிஎம்ஸ்சுக்கு காது கேட்காத நேரம் பார்த்தா இளையராஜா திட்டுவாரு? இதெல்லாம் ஓவரா இல்ல. அதிலும் அவருக்கிட்ட போய் சான்ஸ் கேட்டுருக்காரு. இளையராஜாவுக்கு இப்போ கர்வம் இருக்குன்னு சொல்றதை நியாயம்னு சொல்றாங்க. ஆனா அப்பவே இருந்துருக்கே. இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல என்பதுதான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

sankaran v

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

15 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago