அரசியலுக்கே வரமாட்டேன்னு சொன்னவரா இப்படி தொபுக்கடீர்னு குதிச்சாரு… விஜயின் பிளாஷ்பேக்!

Published on: March 18, 2025
---Advertisement---

விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் திடீர் என தொடங்கி அனைத்துத் தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தினார். அதே நேரம் மிகப்பெரிய அரசியல் மாநாட்டையும் நடத்தி அசத்தினார். தொடர்ந்து தனது கடைசி படம் எச்.வினோத் இயக்குவதுதான் என்றார். அது அவரது 69வது படம். இந்தப் படத்தின் பெயர் ஜனநாயகன்.

இன்ப அதிர்ச்சி: இதன்பிறகு படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போகிறேன் என்றும் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அவர் முன்பு ஒரு பேட்டியில் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொன்னாராம். தொடர்ந்து சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார்னு பாருங்க…

அரசியலில் வேகம்: தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய் இன்றைக்கு அரசியலில் எவ்வளவு வேகமாக இருக்கிறார் என்று பாருங்க. ஆனா இதே வேகம் பல ஆண்டுகளுக்கு முன்னால அவருக்கிட்ட இருந்ததா என்றால் இல்லைன்னு தான் சொல்லணும்.

பல நல உதவிகள்: அன்றைய காலகட்டத்தில் அரசியலுக்கே வரமாட்டேன்னு சொன்னவர்தான் விஜய். இன்னைக்கு நான் சினிமாவுல சொத்து சுகத்தோடு இருக்கேன்னா அதுக்கு முக்கியமான காரணம் ரசிகர்கள்தான். அதனால இதுல இருந்து கொஞ்சம் அவங்களுக்குத் திருப்பிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அதன் காரணமாகத்தான் பல நல உதவிகளை நான் செய்கிறேன்.

கையிலே அரசாங்கம்: இதை ஒரு சில குறிப்பிட்ட மக்களுக்கு நான் செய்றேன். மொத்த மக்களுக்கும் செய்யணும்னா என்னுடைய கையிலே அரசாங்கம் இருக்க வேண்டும். அரசாங்கம் என் கையில இருக்கான்னா இல்ல. அதனாலதான் ஒரு சிலருக்கு முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டு இருக்கிறேன்.

மற்றபடி அரசியலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அரசியலுக்கு வரவும் மாட்டேன் என்று ஒரு பேட்டியிலே பதிவு செய்து இருக்கிறார் விஜய். காலம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எப்படிப்பட்ட மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தி இருக்கிறது என்று பாருங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment