அந்த விஷயத்தில் எம்ஜிஆரை விஞ்சிய விஜயகாந்த்... கேப்டன்னாலே கெத்துதான்!

by sankaran v |
அந்த விஷயத்தில் எம்ஜிஆரை விஞ்சிய விஜயகாந்த்... கேப்டன்னாலே கெத்துதான்!
X

தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் கதாநாயகர்கள் பல மொழிப்படங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மக்கள் திலகம் எம்ஜிஆர் அந்த வகையில் தனிப்பிறவி தான். அவர் தமிழைத் தவிர வேறு மொழிப்படங்களில் நடித்ததே இல்லை. அப்படி நடித்த ஒரே படம்தான் இது. என்னன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனே சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

ஜெனோவா: மக்கள் திலகம் எம்ஜிஆர் வேற்று மொழிப்படங்களில் நடித்துள்ளாரான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். எம்ஜிஆர் ஒரே ஒரு வேற்றுமொழிப்படத்தில் தான் நடித்துள்ளார்.

அதன் பெயர் ஜெனோவா. இது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவானது. இந்தப் படத்தில்தான் எம்எஸ்.விஸ்வநாதன் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.

கருப்பு எம்ஜிஆர்: எம்ஜிஆர் இப்படின்னா அதே மாதிரிதான் கருப்பு எம்ஜிஆர். அவர் ஒரு படி மேலன்னு சொல்லலாம். அவர் தமிழைத் தவிர இதுவரை வேறு எந்த மொழிப்படங்களிலும் நடிக்கவில்லை. விஜயகாந்த் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்துள்ளார் என்றால் அந்த பெருமை தமிழ்த்திரை உலகிலேயே அவரை மட்டுமேச் சாரும்.

தனித்துத் தெரிந்தவர்: பிலிம் இன்ஸடிட்யூட் மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். சண்டைக்காட்சிகளா? எனக்கு டூப்பே வேண்டாம் என்று மறுத்துவிடுவார். கமல், ரஜினி என இரு பெரும் ஜாம்பவான்கள் மட்டுமே கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துத் தெரிந்தவர் தான் விஜயகாந்த்.

இளம் நடிகர்களின் வளர்ச்சியில் அக்கறை: மனிதாபிமானம் மிக்க கேப்டன். நடிகராக இருந்தே நடிகர் சங்கத்துக்குத் தலைவராகவும் ஆனார். இளம் நடிகர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டி அவர்களைக் கைகொடுத்துத் தூக்கி விட்டவர் இவர்தான். ஏழை எளியவர்களுக்கு உதவ முதல் ஆளாக ஓடோடி வருபவர் விஜயகாந்த் தான். இவரை கருப்பு எம்ஜிஆருன்னும், புரட்சிக்கலைஞருன்னும் ரசிகர்கள் அன்போடு அழைத்தனர்.

Next Story