பாரதிராஜா சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி பார்த்த வேலை... அட அப்பவே அவ்ளோ பெரிய ஆளா?

by sankaran v |
பாரதிராஜா சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி பார்த்த வேலை... அட அப்பவே அவ்ளோ பெரிய ஆளா?
X

பதினாறு வயதினிலே: கிராமிய படங்களை மண் மணக்க மணக்க எடுப்பவர் என்றால் அது இயக்குனர் இமயம் பாரதிராஜா தான். இவர் படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். இவரது முதல் படமே பதினாறு வயதினிலே தான். இந்தப் படத்தில் கமலை கோவணம் கட்டி நடிக்க வைத்து கெத்து காட்டினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதே நேரம் அந்தப் படத்தில் கமலை சப்பாணியாகவும், ரஜினியை பரட்டையாகவும் நடிக்க வைத்தார்.

ரசிகர்களின் கரகோஷம்: படம் டைட்டில் போடுவதற்கு முன் இவர் தனது கரகர குரலில் 'உங்கள் பாசத்துக்கு உரிய பாரதிராஜா பேசுகிறேன்'னு சொல்லும் போதே திரையரங்கில் ரசிகர்களின் கரகோஷம் காதைக் கிழிக்க ஆரம்பித்துவிடும். கமலை வைத்து இவர் எடுத்த வித்தியாசமான திகில் படம் சிகப்பு ரோஜாக்கள்.

அப்படி என்ன வேலை?: கிழக்குச்சீமையிலே படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அதெல்லாம் சரிதான். பாரதிராஜா சினிமாவுக்கு வரக் காரணமே அவருக்கு இருந்த தீவிர சினிமா மோகம்தான். சினிமாவுக்கு வருவதற்கு முன் பாரதிராஜா அப்படி என்ன வேலை செய்தாருன்னு பாருங்க.

தேனி மாவட்டம் அல்லி நகரம்தான் இவரது சொந்த ஊரு. சின்னச்சாமி தான் இயற்பெயரு பேரு. அப்பா பேரு மாயத்தேவர். அம்மா பேரு கருத்தம்மா. அதனாலதான் அம்மா பேருலயே படத்தையும் எடுத்து சூப்பர்ஹிட் ஆக்கினார்.

சுகாதார ஆய்வாளர்: சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி அவரது சொந்த ஊருலயே கொஞ்ச நாளா சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்துள்ளார். அப்புறம்தான் சினிமாவுக்குப் போகணும்னு ஆர்வம் வந்துருக்கு. இவர் இயக்குனர் பி.புல்லையாவிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். தொடர்ந்து கன்னட இயக்குனர் புட்டண்ணாவிடம் போய் பல நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டாராம்.

பெரிய ஆளுமை: தமிழ்த்திரை உலகில் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. சினிமா மீது தீராக் காதலைக் கொண்டவர்தான் இவர் என்பதை இவரது படங்களே நிரூபிக்கின்றன. இவர் சினிமாவில்தான் பெரிய ஆளுமை என்றால் அதற்கு முன்பே பெரிய அதிகாரியாகத் தானே இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

Next Story