எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய படங்களில் எது சூப்பர்ஹிட்? சொன்னதை நிறைவேற்றினாரா?

புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர்தான். இவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை வெற்றி தான். இவருக்கு சினிமாவில் தெரியாத விஷயங்களே இல்லை எனலாம். அதனால்தான் எம்ஜிஆரின் படங்களில் பாடல்களும் சரி. பைட்டும் சரி. காமெடி, சென்டிமென்ட், லொகேஷன் என எதை எடுத்தாலும் சூப்பர்ஹிட்டாக உள்ளது.
3 படங்கள் ஹிட்: குறிப்பாக இசை அமைப்பாளரின் முன் அமர்ந்து தனக்கு எதுபோன்ற பாடல்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதைக் பெற்றுக் கொண்டு வருவாராம் எம்ஜிஆர். அதனால்தான் அவரது படங்களில் பாடல்கள் ஹிட். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களைத் தயாரித்து நடித்தவர் எம்ஜிஆர். இந்த 3 படங்களையும் அவர் தயாரித்தாலும் மிக அதிகமான நாள்கள் ஓடிய படம், வசூல் பெற்ற படம் என்றால் அது உலகம் சுற்றும் வாலிபன்தான்.
ஓடினால் மன்னன் இல்லையேல் நாடோடி: 1958ல் எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்த படம் நாடோடி மன்னன். பிஎஸ்.வீரப்பா, நம்பியார், பானுமதி, எம்என்.ராஜம், சரோஜாதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எம்.நாயுடு இசை அமைத்துள்ளார். 'இந்தப் படம் வெளியாகும் முன் ஓடினால் நான் மன்னன் இல்லையேல் நாடோடி' என்றாராம் எம்ஜிஆர்.
அதே போல படம் வெற்றிகரமாக பட்டி தொட்டி எங்கும் ஓடி சாதனை படைத்தது. எம்ஜிஆர் சொன்னது போலவே முதல்வராகவும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தான் தூங்காதே தம்பி தூங்காதே, உழைப்பதில்லா, சும்மா கிடந்த ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன்: 1969ல் எம்ஜிஆர் தயாரித்து நடித்த படம் அடிமைப்பெண். கே.சங்கர் இயக்கியுள்ளார். எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா. படம் சூப்பர் டூப்பர் ஹிட். 1973ல் எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்ஜிஆர், மஞ்சுளா, லதா, நம்பியார், அசோகன், மனோகர் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்வி இசையில் பாடல்கள் சூப்பர். படமும் சூப்பரோ சூப்பர்.