கமலுடன் போட்டா போட்டி: ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காததுக்கு இதுதான் காரணமா?..

பாலுமகேந்திரா இயக்கத்தில் 1983ல் கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த சூப்பர்ஹிட் படம் மூன்றாம்பிறை. இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் நாம் மெய்மறந்து ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும்.
தேசிய விருது: அப்படி ஒரு அபாரமான நடிப்பை ஸ்ரீதேவி வெளிப்படுத்தி இருந்தார். மனவளர்ச்சி குன்றிய ஒரு கேரக்டர். காட்சிக்குக் காட்சி ரசிக்க வைத்து இருந்தார். கண்டிப்பாக இவருக்குத் தான் தேசிய விருது என்றார்கள். ஆனால் கடைசியில் கமல் அந்த விருதை தட்டிப் பறித்து விட்டார்.
கிளைமாக்ஸ் காட்சி: இது எப்படி சாத்தியமானது என்று ரசிகர்கள் மத்தியில் பலவித விமர்சனங்கள் அப்போது எழுந்தன. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமலின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். நமக்கே கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி விடும். அப்படி ஒரு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மற்ற காட்சிகளில் சாதாரணமாக ஸ்ரீதேவியின் பாதுகாவலராகவே நடித்து இருந்தார்.
குரங்கு மாதிரி கமல்: கிளைமாக்ஸ் காட்சியில் மனத்தெளிவு அடைந்ததும் ஸ்ரீதேவியிடம் தான் யார் என்பதை சைகையால் உணர்த்துவார். ரெயில் நிலையம். ட்ரெயின் புறப்பட்டு நகர ஆரம்பிக்கும். ஆனால் அவரோ கமலை பிச்சைக்காரன்னு நினைத்து 10 காசைத் தூக்கிப் போடுவார். கமல் குரங்கு மாதிரி எல்லாம் தன் கடந்த கால சம்பவங்களை நடித்துக் காட்டுவார். எதுவுமே அவளுக்கு நினைவில் வராது.
கமல்: இது ஒரு புறம் இருந்தாலும் உண்மையாகவே ஸ்ரீதேவிக்கு விருது கொடுக்கப்படாததற்கு என்ன காரணம் என்ற தகவல் இப்போது தெரியவந்துள்ளது. என்னன்னா கமல் ஆண் கேட்டகரியில் வருகிறார். அவர் தன் மனதில் தேக்கிய அன்பை அந்தளவு அற்புதமாகக் கிளைமாக்ஸ் காட்சியில் கடத்துகிறார். அதனால்தான் தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவி: ஆனால் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிப்பு என்றாலும் அவர் பெண் கேட்டகரி. அவரை விட அர்த் என்ற படத்தில் நடித்த ஷபனா ஆஸ்மிக்கு சிறப்பான நடிப்பு. அதனால் பெண் கேட்டகரிக்கான தேசிய விருது அவருக்குப் போய்விட்டது என்றும் தெரியவருகிறது. அதே சமயம் அந்தப் படத்தில் சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதை ஸ்ரீதேவி பெற்றுவிட்டார்.