எம்ஜிஆர் சுடப்பட்ட வழக்கில் மனம் வருந்திய நடிகவேள்.. உண்மையை உடைத்த பேரன்

by Rohini |   ( Updated:2024-12-20 01:30:28  )
mgr
X

mgr

சுடப்பட்ட எம்ஜிஆர்:

1967 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியது. எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டு தானும் சுட்டுக் கொண்டார் என்று அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளியானது. இதற்கான பின்னணி என்ன என்பது இதுவரை யாருக்குமே தெரியாத ஒன்று. இன்று வரை அது ரகசியமாகவே இருக்கிறது. உண்மையிலேயே என்ன நடந்தது? ஏன் நடந்தது? எதற்காக நடந்தது என எம்ஜிஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் மட்டுமே தெரியும்.

இந்த நிலையில் எம்.ஆர்.ராதாவின் பேரனும் நடிகருமான எம்.ஆர்.ஆர் வாசு சமீபத்திய ஒரு பேட்டியில் இந்த சம்பவத்தை பற்றி கூறியிருக்கிறார். இதுவரை வாசு புரடக்‌ஷனில் எம்ஜிஆரும் எம்.ஆர். ராதாவும் நடிக்க இருந்து அந்தப் படத்தின் ஒரு விவாதத்திற்காக செல்ல அப்போது எம்ஜிஆருக்கும் ராதாவுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு அந்த கோபத்தில்தான் எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா சுட்டார் என்று ஒரு தகவல் இருந்தது. ஆனால் அது இல்லை என்று வாசு கூறியிருக்கிறார்.

ஒரு லட்சம் கடன்:

சொல்லப்போனால் பெற்றால் தான் பிள்ளை படத்தை எடுக்க வெளியில் ஒரு லட்சம் கடன் வாங்கினாராம் ராதா. அதுவும் எம்ஜிஆர் கால்ஷீட் கொடுத்தால்தான் வெளியில் கடன் தருவார்கள் என்ற நிலை இருக்க எம்ஜிஆரிடம் கால்ஷீட் வாங்கி கடன் வாங்கினாராம் எம்.ஆர்.ராதா. ஆனால் அந்த நேரத்தில் அரசியல் , பல படங்களின் வாய்ப்பு என எம்ஜிஆர் பிஸியாக இருக்க இந்தப் படத்தில் சரியாக எம்ஜிஆரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இந்தப் பக்கம் வட்டிக்கு கடன் வாங்கிய ராதாவுக்கு வட்டி ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் இதனால்தான் சுட்டாரா என்று சொல்ல முடியாது. அது அவங்க இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் அந்த சம்பவம் நடந்த பிறகு எம்.ஆர்.ராதாவும் ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு வந்து மனோரமா மகன் திருமணத்தில்தான் எம்ஜிஆரை சந்திக்கிறாராம். அப்போது எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தாராம். எம்.ஆர்.ராதா கீழே மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தாராம். மேடையில் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் நாற்காலி எல்லாம் போடப்பட மனோரமா நேராக எம்.ஆர். ராதா அருகில் வந்து அவரை அழைத்து எம்ஜிஆருக்காக போடப்பட்ட நாற்காலிக்கு அருகில் அமரவைத்தாராம். இது அங்கிருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.

பெரிய சிம்மாசனம்:

எம்ஜிஆருக்காக பெரிய சிம்மாசனம் போடப்பட்டிருந்ததாம். அதன் பிறகு எம்ஜிஆர் வர அவரை பார்த்து ‘என்ன ராமச்சந்திரா நல்லா இருக்கீயா’ என கேட்டாராம் எம். ஆர். ராதா. எம்ஜிஆர் பதிலுக்கு நல்லா இருக்கேண்ணன் என்று கூறி அமர்ந்தாராம். பின் ராதா பேசும் போது ‘ஒரு கல்யாணத்துக்கு ஐயர் இருந்தா போதாதா? முதலமைச்சருக்கு இதுதான் வேலையா? இங்கு வந்தால் வெளி வேலையை யார் கவனிப்பா?’ என்று கேட்டிருக்கிறார்,

உடனே எம்ஜிஆர் மைக்கை வாங்கி ‘கரெக்ட்தான். முதலமைச்சருக்கு இது வேலை இல்லை. ஆசைப்பட்டு கூப்பிட்டாங்க. அப்போதிலிருந்து நடித்த நடிகை. இனி எம்ஜிஆர் தலைமையில் திருமணம் நடந்தால் அந்த திருமணத்திற்கு இனி எம்.ஆர்.ராதா வருவார்’ என கூறினார். பின் எல்லாம் முடிந்து எம். ஆர். ராதா கிளம்ப அவரது கார் கதவை திறந்து ‘உடம்பை பாத்துக்கோங்கண்ணன்’ என்று கூறி வழியனுப்பிவிட்டு பின் எம்ஜிஆர் புறப்பட்டு சென்றாராம்.


வருந்திய எம்.ஆர்.ராதா:

இந்த சம்பவம் எம். ஆர்.ராதாவை பெரிதும் பாதித்திருக்கிறது. ஒரு நல்லவனை சுட்டுட்டோம் என்று வருந்தி எம்.ஆர். ராதா தன்னுடன் வந்த கஜபதி என்பவரிடம் சொல்லி வருத்தப்பட்ட்டாராம். ஆனால் எம்.ஆர். ராதா வருத்தப்பட்ட செய்தி யாருக்கும் தெரியாது. அது தெரிந்த ஒரே நபர் கஜபதிதான். ஆனால் அவரும் இப்போது இல்லை. இருந்தாலும் என் தாத்தா தான் செய்ததை நினைத்து மிகவும் வருந்தியிருக்கிறார் என்று எம். ஆர்.ஆர். வாசு கூறினார்.

இதையும் படிங்க: சீமானே சைலன்ட் ஆயிட்டாரு!.. ஆனா இவரு விடமாட்டார் போல.. விஜய நான் ஸ்டாப்பா அடிக்கிறாரே!..

Next Story