வடிவேலு மிஸ் பண்ணிய விஜய் படம்... இருமடங்கு சம்பளம் பெற்ற செந்தில்..!
விஜய் நடித்த ஒரு படத்தில் வடிவேலு தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருடைய இடத்தில் செந்தில் நடித்துவிட்டார். வடிவேலுவால் நடிக்க முடியாமல் போக என்ன காரணம்? விஜய் நடித்த படத்தின் பெயர் என்ன என்று ஆஸ்கர் மூவீஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொல்கிறார்.
இவர் பிரபல இயக்குனர் எம்.பாஸ்கரின் மகன். இவர் ஆரம்பத்தில் ரஜினிகாந்தின் டிரேடு மார்க் சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துக்குக் காரணமான பைரவி படத்தை இயக்கியவர். பின்னாளில் ஆஸ்கர் மூவீஸ் என்ற பெயரில் சில படங்களைத் தயாரித்துள்ளார். வாங்க என்ன விவரம்னு பார்ப்போம்.
விஷ்ணு படத்தின் தயாரிப்பாளர் எம்.எஸ்.பாஸ்கர். இந்தப் படத்தில் விஜய் நடிக்க அவரது தந்தை எஸ்ஏ.சந்திரசேகர் இயக்கினார். இந்தப் படத்திற்கு அப்போது பிரபலமாக வளர்ந்து வந்த வடிவேலுவை புக்கிங் செய்துள்ளார்கள். ஆனால் வடிவேலு அப்போது பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.
அவருக்குக் கால்ஷீட் பிரச்சனை வந்துவிட்டது. விஷ்ணு படத்திற்காக விஜய், வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சி மூணாறுல எடுப்பதாக இருந்தது. அந்தக் குறிப்பிட்ட நாளில் வடிவேலுவால் கலந்து கொள்ள முடியவில்லை. 'நாலு நாள் கழித்து வருகிறேன்'னு தயாரிப்பாளரிடம் சொல்ல அதுக்கு அவர் 'அதெல்லாம் முடியாது. எனக்கு உடனே அந்த சீனை எடுத்து ஆகணும்'னு சொல்கிறார்.
'உன்னால் முடியாதுன்னா அட்வான்ஸா வாங்கிய 2 லட்சத்தைத் திருப்பிக் கொடு'ன்னு கேட்கிறார். அதற்கு 'வேறு ஒரு படத்துக்கு அட்வான்ஸ் வாங்கினதும் அந்த பணத்தைத் திருப்பித் தருகிறேன்' என்று வடிவேலு சொல்லி இருக்கிறார். வடிவேலுவும் இந்தப் பிரச்சனையை படத்தின் இயக்குனர் எஸ்.ஏ.சியிடம் சொல்கிறார்.
அவர் தயாரிப்பாளர் எம்எஸ்.பாஸ்கரிடம் 'அவன் வளர்ந்து வர்ற புது காமெடியன். இப்போ நம்ம படத்திலும் விஜய் புதுமுகம்தான். வளர்ந்து வர்ற நம்ம ஹீரோவுக்கு அவரை மாதிரி காமெடியனை நடிக்க வச்சா ஒரு சப்போர்ட்டா இருக்கும்'னு சொல்கிறார். 'வடிவேலுவுக்காக நாம வேணா நாலு நாள் கழிச்சி அந்த சூட்டிங்கை வச்சிடலாம்'னு சொல்கிறார்.
அதற்கு பாஸ்கரோ 'அதெல்லாம் முடியாது. இது பாலிசி பிரச்சனை. நம்மக்கிட்ட கமிட் ஆனதும் வேறொரு படத்துக்காக நம்ம கேட்குற தேதியில நடிக்க முடியாதுன்னு அவர் சொல்றாரு. அதை நாம எப்படி ஒத்துக்க முடியும்? அவரைத் தூக்கிடலாம்'னு ஸ்டிரிக்டா சொல்லிடறாரு. அதனால அந்தப் படத்துக்கு வடிவேலுவுக்கு 5 லட்சம் சம்பளமாக பேசிருக்காங்க.
அந்த இடத்துல வடிவேலுவுக்குப் பதிலாக செந்திலை நடிக்க வச்சிடலாம்னு முடிவு பண்ணி அவரைக் கூப்பிடுறாங்க. அவரு 'சம்பளம் எவ்வளவு'ன்னு கேட்குறாரு. 'அதைப் பத்தி எல்லாம் பேசாத. நடி'ன்னு சொல்ல, அவரும் அப்பா மேல உள்ள நட்பால நடிச்சிக் கொடுக்கறாரு. அவருக்கு படம் முடிஞ்சதும் வடிவேலுவுக்கு பேசுன சம்பளம் மாதிரி டபுள் மடங்கு 10 லட்சமா கொடுக்குறாங்க அப்பா என்கிறார் அவரது மகன் பாலாஜி பிரபு.