பூவும், கிளியும் தலைப்பாகக் கொண்டு அலங்கரித்த தமிழ்ப்படங்கள் - ஓர் பார்வை
தமிழ்ப்படங்களில் பல சுவாரசியமான தொகுப்புகள் தோண்ட தோண்டக் கிடைத்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் பூவும், கிளியும் பெயர் வந்தால் அந்தப்படங்கள் எப்படி இருக்கும் என்றால் அவை அனைத்துமே மென்மையான காதல் கதை அம்சம் கொண்ட படங்களாக உள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
தூது போ செல்லக்கிளியே
1991ல் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளியான படம். வருண்ராஜ், செண்பகம் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.
ஆம்பளைங்க, எலுமிச்சம்பூவே, நான் எப்போதும், ஒத்த ரூபா, தாலாட்டு பாட வந்தேன், தூது போ, வால குமாரி புள்ள, ஏனோ என்னை அழைக்க ஆகிய பாடல்கள் உள்ளன.
பச்சைக்கிளி முத்துச்சரம்
2007ல் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளியான படம். சரத்குமார், ஜோதிகா, மிலிந்த் சோமன், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.
உனக்குள் நான், உன் சிரிப்பினில், காதல் கொஞ்சம், கரு கரு ஆகிய பாடல்கள் உள்ளன.
வெள்ளை ரோஜா
பவித்ரன் கதை எழுத ஏ.ஜெகன்னாதன் 1983ல் இயக்கிய படம் வெள்ளை ரோஜா. சிவாஜி, அம்பிகா, பிரபு, ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
பாடல்கள் அனைத்தும் எவர்க்ரீன் ஹிட். சோலைப்பூவில் மாலை தென்றல், ஓ மானே மானே, தேவனின் கோவில், நாகூர் பக்கத்துல, வாடி என் ஆகிய பாடல்கள் உள்ளன.
செவ்வந்தி
1994ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் நிவாஸ். சந்தன பாண்டியன், ஸ்ரீஜா, சி.கே.சரஸ்வதி, ஜனகராஜ், சரண்ராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் மென்மையான ரகங்கள்.
புன்னைவனப் பூங்குயிலே, வாசமல்லி பூவு, அன்பே ஆருயிரே, பொண்ணாட்டம், பூவாட்டம், செம்மீனே செம்மீனே ஆகிய பாடல்கள் உள்ளன.
சிகப்பு ரோஜாக்கள்
1978ல் வெளியான இந்தப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கியுள்ளார். பாக்யராஜ் வசனம் எழுதியுள்ளார். கமல், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான ஒரு த்ரில்லர் கதை.
இந்தப்படத்தில் நடித்த கமலுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. 1980ல் இந்தியில் ரெட்ரோஸ் என்ற பெயரில் வெளியானது. இளையராஜாவின் இன்னிசையில் இந்த மின்மினிக்கு, நினைவோ ஒரு பறவை ஆகிய பாடல்கள் உள்ளன.