Actor Vijay: சமீபகாலமாக சோசியல் மீடியாவில் மிகவும் டிரெண்டிங்காக போய்க் கொண்டிருப்பது விஜய் மற்றும் அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரை பற்றித்தான். எங்கு பார்த்தாலும் விஜயை பற்றியும் அவரது கட்சியின் பெயரை பற்றியும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரசியல் கட்சியை ஆரம்பித்ததும் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மற்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படங்கள் என எல்லாவற்றையும் முடித்த பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்து விட்டார்.
இதையும் படிங்க: இதனால்தான் உங்கள் படத்தில் வேலை செய்யவில்லை!.. பி.சி.ஸ்ரீராம் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போன ஷங்கர்..
ஒரு பக்கம் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வந்தாலும் அவர் சினிமாவில் இருந்து விலகுவது அவரை சார்ந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விஜயின் அரசியல் நிலைப்பாடுகளை குறித்து வலைபேச்சு அந்தனன் ஒரு விஷயம் பேசியிருக்கிறார்.
அதாவது சமீபத்தில் விஜய் கோட் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது அவரை பார்க்க வந்த ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இது இன்று மட்டுமில்லை. ஏற்கனவே ஒரு சமயம் இதே போன்ற பிரச்சினை வந்துள்ளதாம்.
இதையும் படிங்க : இதெல்லாம் என்னங்க பாடல்வரி? வைரமுத்துவை குறைச் சொன்ன பிரபல இயக்குனர்… ட்விஸ்ட் கொடுத்த இளையராஜா
இது குறித்து பேசிய அந்தனன் ‘எப்பொழுதுமே விஜய் அவரது ரசிகர்களை படப்பிடிப்பில் சந்திப்பது வழக்கம். அதுவும் அரசியலில் இறங்கிய பிறகு அதை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறார் விஜய்.’
இதனால் பாதிப்பு யாருக்கு என விஜய் கொஞ்சம் யோசிக்க வேண்டும். படப்பிடிப்பில் இதற்காக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கினாலும் தயாரிப்பு தரப்பில் எந்தவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என விஜய் ஏன் நினைக்க மறந்தார்? இது கொஞ்சமும் சரியில்லை என அந்தனன் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒருவழியா கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டாங்கப்பா!… சங்கமத்துக்கு எண்ட் கார்ட் வந்துடுச்சே…
