விஜயகாந்துக்கு இதுக்கெல்லாம் கோபம் வருமா? கோபத்தில் அவர் செய்த செயல்.. மகன் பகிர்ந்த சீக்ரெட்

by Rohini |   ( Updated:2024-08-28 14:37:57  )
viji 1
X

viji 1

Vijayakanth: தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிட்ட நடிகர்களால் மட்டுமே காலம் முழுவதும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தமிழ் மக்களின் நெஞ்சங்களில் குடிபெயர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். அவருடைய மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் தான் அவருடைய பிறந்த நாளை தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அவருடைய சமாதிக்கு சென்று கொண்டாடினார்கள். அப்போது அங்கு விஜய்காந்தின் உருவ சிலை திறக்கப்பட்டு அந்த சிலையை பிடித்தபடி அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் அழுத காட்சி அனைவரையும் உருக்கமாக பார்க்க வைத்தது.

இதையும் படிங்க: கோட் படத்துக்கு பெரிய புரொமோஷனாகும் 4வது சிங்கிள்… சங்கீதாவுக்கும் சர்ப்ரைஸ்

இந்த நிலையில் விஜயகாந்தை பற்றி அவருடைய மகன் சண்முக பாண்டியன் கூறிய ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. சினிமா, அரசியல் என தன் இரு கண்களாக விஜயகாந்த் எப்படி நினைத்து வந்தாரோ அதை எல்லாம் தாண்டி தன் மனைவி மற்றும் குழந்தைகளை காத்து வந்தவர் விஜயகாந்த். எப்போதுமே தன் குடும்பத்தினர் மீது தனி கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் உருவம் பதித்த டாட்டூ ஒன்றை சண்முக பாண்டி அவருடைய கையில் போட்டிருக்கிறார்.அது லண்டனில் போய் அவர் வரைந்தது. யாருக்குமே தெரியாமல் லண்டன் சென்று அந்த டாட்டூவை வரைந்தார் சண்முக பாண்டியன். அதை விஜயகாந்த்திடம் காண்பித்தபோது ‘இதெல்லாம் எதுக்கு போட்ட’ என கேட்டாராம் விஜயகாந்த்.

இதையும் படிங்க: சூரியை காலி செய்த மாரி!.. வாழை அடித்த அடியில் காணாமல் போன கொட்டுக்காளி..

அதற்கு சண்முக பாண்டியன் எப்போதும் நீங்கள் என்னுடன் இருக்கவே வேண்டும் என்பதற்காகத்தான் என சொன்னதும் அடுத்து ஒரு வார்த்தை கூட விஜயகாந்த் பேசவில்லையாம். மேலும் தன் அப்பாவுக்கு எந்த விஷயத்தில் கோபம் வரும் என்ற கேள்விக்கு பதில் அளித்த சண்முக பாண்டியன் என்னுடைய அண்ணனை பெயர் சொல்லி அழைத்தால் அப்பாவுக்கு பிடிக்காது.

அண்ணன் என்றே தான் கூப்பிட அவர் விரும்புவார். ஒருமுறை நான் பிரபா என கூப்பிட்டு விட்டேன். அதற்கு என்னை அவர் அடி உதைத்து விட்டார். அதிலிருந்து இன்று வரை பிரபா அண்ணன் அல்லது அண்ணா என்று தான் அழைத்து வருகிறேன் என சண்முக பாண்டியன் கூறினார். இப்படி நம் பாரம்பரியம் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர் விஜயகாந்த் என்பது இதிலிருந்து தெரிகிறது.

இதையும் படிங்க: டோன்ட் டச் மி!.. கையை பிடித்த கமெடி நடிகரிடம் கோபப்பட்ட தல!.. இப்படிப்பட்டவரா அஜித்!..

Next Story