Connect with us
rajini

Cinema News

தள்ளுங்க.. தள்ளுங்க! ‘ஜெய்லரை’ பார்க்க ஓடிவந்த மில்லர் – தலை தெறிக்க ஓடிவரும் தனுஷ்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி , ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் இன்று உலகெங்கிலும் திரையில் ரிலீஸான படம் ஜெய்லர். அனிருத் இசையில் படம் இன்று வெளியாகியுள்ளது. ரஜினியுடன் சேர்ந்து ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், மோகன்லால், விநாயக், யோகிபாபு மற்றும் பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

தமிழ் நாடு மட்டுமில்லாமல் அனைத்து நாடுகளிலும் உள்ள ரசிகர்களும் ஜெய்லர் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். தமிழ் நாட்டில் மட்டும் படத்தின் முதல் நாள் காட்சி 9 மணிக்கு ஆரம்பமானது.

இதையும் படிங்க : தலைவரு அலப்பர!.. கூஸ்பம்ப்ஸ்.. படம் வேற மாறி.. வேற மாறி!.. ஜெயிலர் டிவிட்டர் விமர்சனம்…

ஆனால் வெளிநாடுகளில் அதிகாலையிலேயே ஷோ ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதனால் வெளிநாடு  வாழ் ரசிகர்கள் முதல் ஷோவை பார்த்து படத்தை பற்றிய அப்டேட்டை இணையத்தில் வைரலாக்கினர். படம் முழுவதும் ஃபுல் எண்டெர்டெய்னர் படமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

rajini1

rajini1

மேலும் ஒரு பெரிய இடைவேளிக்கு பிறகு ரஜினியை பாட்ஷாவில் பார்த்தது போல் இருந்தது எனவும் கூறினார்கள். நெல்சன் ரஜினியை இந்தப் படத்தில் மிக அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார் என்றும் விட்டதை பிடித்து விட்டார் நெல்சன் என்றும் கூறுகிறார்கள்.

படத்தின் முதல் பாதி பட்டையை கிளப்புகிறது என்றும் இரண்டாம் பாதி வழக்கமான முறையில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெய்லர் திரைப்படம் ரசிகர்களுக்கு மட்டுமில்லாது ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க : நெல்சன் சம்பவம் பண்ணிட்டாரு!.. ஜெயிலர் ஃபர்ஸ்ட் ஆப் தெறிக்குது!.. ஃபயர் விடும் ரசிகர்கள்!…

அதன் விளைவாக படத்தின் முதல் நாள் காட்சியை போய் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் ஓடோடி வந்திருக்கிறார் தனுஷ். ஜெய்லர் திரைப்படத்தை பார்க்க தனுஷ் ரோகினி தியேட்டருக்கு வரும் காட்சிதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top