Ajith AK 63: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை மகிழ்திருமேனி இயக்க அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுமூச்சுடன் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இரண்டு மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த படக்குழுவும் களத்தில் இறங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் திடீர் அறிவிப்பாக அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது மார்க் ஆண்டனி ஹிட் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் என்று இணையத்தில் செய்திகள் வைரலானது.
இதையும் படிங்க: மைக்க பாத்ததும் ஓடுற ஆளு! இவர வச்சா அந்த சீன எடுக்குறீங்க – ‘தளபதி68’ல் விஜய்க்கு டஃபே இதுதான்
ஆனால் அஜித் அடுத்ததாக சிறுத்தை சிவாவுடன் இணையப் போவதாகவும் அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருப்பதாகவும் அதற்காக அட்வான்ஸ் தொகையும் கொடுத்துவிட்டதாகவும் முன்பே செய்திகள் வெளியானது. ஆனால் இந்த திடீர் அறிவிப்பால் சிறுத்தை சிவாவுக்கும் அஜித்துக்கும் ஏதாவது பிரச்சினையா என வழக்கம் போல நம் நெட்டிசன்கள் குடைய ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் உண்மையில் கங்குவா திரைப்படம் இரண்டு பாகமாக வரவிருப்பதால் இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் வரை தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறதாம். அதன் பிறகு கட்டாயம் ஒரு ஏழு மாதங்கள் எனக்கு ப்ரேக் வேண்டும் என சிறுத்தை சிவா சொல்லியிருக்கிறாராம்.
இதையும் படிங்க: கலக்கிட்ட கண்ணா!. லோக்கியை கொண்டாடிய ரஜினி!. தலைவர் 171 படம் இப்படித்தான் இருக்குமாம்…
அதனால் அஜித் சிறுத்தை சிவா இணையப் போகும் படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் தான் தொடங்க வாய்ப்பிருக்கிறதாம். அதுவரைக்கும் நம்ம தல என்ன பண்ணுவார். அதனால் ஏற்கனவே ‘தல’ யால்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்று சொல்லும் ஆதிக்கை புடிச்சி தன் கஸ்டடிக்குள் போட்டு வைத்துக் கொண்டாராம் அஜித்.
அஜித் ஆதிக் இணையும் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் 19ஆம் தேதி வெளியிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்க அந்த தேதியில் தான் லியோ படம் வெளியாகிறது. அதனால் வேறு தேதிக்கு அறிவிப்பை தள்ளி வைத்திருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: புருஷனுக்கு மட்டுமா? புள்ளைகளுக்கும் ரெண்டு தான் போலயே…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…