ரஜினி பட வசூலை பார்த்து உருவான அஜித் படம்!.. கடைசியில் ரிசல்ட் இதுதான்!..

Published on: January 31, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: ரஜினிக்கு உண்டான அந்த மாஸ், அவரது ஸ்டைல் அப்படியே அஜித்துக்கும் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். அதனாலேயே ரஜினி விஜய் போட்டி வருமே தவிர ரஜினி அஜித் போட்டி வருவதே இல்லை. ரஜினி ரசிகர்கள் அஜித்தை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.

அதன் விளைவுதான் ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பில்லா படத்தை அஜித்தை வைத்து எடுத்து மீண்டும் அந்த படத்துக்கு புத்துயிர் கொடுத்தார் அஜித். ரஜினியை அந்த நேரம் எப்படி கொண்டாடினார்களோ அதே போல் அஜித்தின் பில்லா படம் வெற்றி பெற்றதும் அவரையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வருவதற்கு இதுதான் காரணமா?.. அதனால் யாருக்கு ஆபத்து?..

சில சமயங்களில் அஜித்துக்காக ரஜினி நின்ற சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. கலைஞர் விழாவில் அஜித் பேசியதற்கு ரஜினி எழுந்து கைதட்ட அதனால் எழுந்ததே பெரிய பிரச்சினை. அதன் பிறகு அஜித்தும் ரஜினியும் கலைஞர் வீட்டிற்கு சமரசம் பேசவும் சென்றார்கள்.

இப்படி ரஜினி அஜித் என தொடர்பு படுத்தியே வருகின்றன. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார். ரஜினியின் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘முத்து’.

இதையும் படிங்க: இது வேண்டாம் செய்யாதீங்க!. பொங்கியெழுந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி!. விஜயும் – அஜித்தும் இத கத்துக்கணும்!

அந்தப் படத்தை பாடி முழுவதும் திரையிட சிவசக்திக்குத்தான் உரிமை கொடுத்தார்களாம். பாடி ஏரியா முழுவதும் சிவசக்தி பாண்டியன் திரையிட அதன் மூலம் கிடைத்த கலெக்‌ஷனை வைத்துதான் அஜித் நடிப்பில் உருவான வான்மதி படத்தை 60சதவீதம் எடுத்து முடித்தாராம். ஆனால் இப்பொழுது இருக்கும் சினிமா மற்றும் பட்ஜெட் எல்லாம் வேறு மாதிரி இருக்கிறது என சிவசக்தி பாண்டியன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.