மணிரத்னம் படத்தை புகழ்ந்து பேசியதால் கடுப்பான ராஜ்கிரண்… உதவி இயக்குனருக்கு நேர்ந்த சோகம்…
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “எதிர் நீச்சல்” என்ற சீரீயலின் மூலம் தற்போது மிக டிரெண்டிங்கான நடிகராக வலம் வருபவர் ஜி.மாரிமுத்து. இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் “கண்ணும் கண்ணும்”, “புலிவால்” போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
ஜி.மாரிமுத்து தனது இஞ்சினியரிங் படிப்பை முடித்து விட்டு பாரதிராஜாவிடம் எப்படியாவது உதவி இயக்குனராக பணியாற்றவிட வேண்டும் என முயற்சி செய்தாராம். ஆனால் அக்காலகட்டத்தில் பாரதிராஜாவிடம் கிட்டத்தட்ட 15 உதவி உதவி இயக்குனர்கள் இருந்தார்கள் என்பதால் பாரதிராஜா இவரை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டாராம்.
அதன் பின் இயக்குனரும் நடிகருமான ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. அதன்படி, ராஜ்கிரண் இயக்கி நடித்த “அரண்மனைக் கிளி”, “எல்லாமே என் ராசாதான்” ஆகிய திரைப்படங்களில் ஜி.மாரிமுத்து உதவி இயக்குனராக பணியாற்றத் தொடங்கினார்.
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மணிரத்னம் இயக்கிய “ரோஜா” திரைப்படம் வெளிவந்தது. மணிரத்னம் திரைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாராம் ஜி.மாரிமுத்து. ஆதலால் ராஜ்கிரணை வற்புறுத்தி “ரோஜா” திரைப்படத்தை பார்ப்பதற்கு அவரை அழைத்துச் சென்றிருந்தாராம்.
ராஜ்கிரண் இளையராஜாவின் தீவிர ரசிகர். “ரோஜா” திரைப்படத்திலோ ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம். ஆதலால் ராஜ்கிரணுக்கு அந்த படம் பிடிக்கவில்லையாம். ஆனாலும் ஜி.மாரிமுத்து, “ரோஜா” படத்தை புகழ்ந்து பேசினாராம். அதுவும் மணிரத்னம் ஒரு இந்திய இயக்குனராக மாறிவிட்டார் எனவும் ரோஜா ஒரு இந்திய திரைப்படம் எனவும் கூறினாராம்.
எனினும் ஜி.மாரிமுத்து மீது ராஜ்கிரண் மிகுந்த அன்போடு இருப்பாராம். ஒரு நாள் ஜி.மாரிமுத்துவை விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என ராஜ்கிரண் விருப்பப்பட்டாராம். அதன்படி மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்தாராம்.
இதை எல்லாம் ராஜ்கிரணிடம் உதவி இயக்குனர்களாக இருந்த ஜி.மாரிமுத்துவின் சீனியர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்களாம். ஆதலால் ஜி.மாரிமுத்துவை குறித்து ராஜ்கிரணிடம் தவறாக பத்த வைத்திருக்கின்றனர். இந்த சூழலால் ஜி.மாரிமுத்து ராஜ்கிரணிடம் இருந்து வெளியே வரவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாம். இந்த தகவலை ஜி.மாரிமுத்துவே சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரசாந்த் பட நடிகையை ஏமாற்றி லம்ப்பான அமவுன்ட்டை சுருட்டிய பிரபல நடிகர்… அடக்கொடுமையே!!