ஜி.வி.பிரகாஷ்க்கு மச்சம்யா….Immortal டீசரை நீங்களே பாருங்களேன்

Published on: December 24, 2025
Immortal
---Advertisement---

தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். இசையமைக்கும்போது கூட இவ்வளவு பிஸி இல்லை. ஆனால் நடிகரானதும் கைவசம் ஏராளமான படங்கள்.

வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜி.வி பிரகாஷ்குமார். ஏ ஆர் ரகுமானின் அக்கா மகனான இவர் முதல் படத்திலேயே தன்னுடைய முத்திரையை பதித்தவர். குறுகிய காலத்திலேயே ரஜினி, அஜித், ஆர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தார். ஒரு கட்டத்தில் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் வரும் ஆசை ஜிவி பிரகாசுக்கும் வந்தது. அதை தொடர்ந்து டார்லிங் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படம் கமர்சியலாக வெற்றி பெற்றதை அடுத்து மளமள வென படங்கள் குவிந்தன. கிட்டதட்ட 24 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்திருப்பார் இவர். இதில் பல படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும்வெற்றிக்காக முயன்று கொண்டிருக்கிறார். இந்த படம் அவருக்கு 25வது படம். இந்த படம் காதல், ரொமான்ஸ் திரில்லர் என பயணிப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் , கயாடு லோஹர் நடிப்பில் Immortal படத்தின் டீஸர் இன்று வெளியானது. இதில் காட்சிக்கு காட்சி ரொமன்ஸில் புகுந்து விளையாடியுள்ளார். டீஸர் துவக்கத்தில் இளைஞர்களை கவரும் பொழுதுபோக்குத் திரைப்படமாகத் தொடங்கி, மெல்ல மெல்ல அமானுஷ்ய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. டீஸரை பார்க்கையில் இப்படம் ஜி.வி.பிரகாஷ்க்கு நிச்சயம் வெற்றியை தரும் என்பது தெரிகிறது. மாரியப்பன் சின்னா என்பவ்ர் இயக்கியுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.