பவதாரினி கையெழுத்த போட்டு 80 லட்சம் மோசடி!.. தினாவ தூக்கி ஆகணும்!.. கங்கை அமரன் ஆவேசம்..

by sankaran v |
Dheena, GA
X

Dheena, GA

தென்னிந்திய இசை அமைப்பாளர் சங்கத்தின் தலைவராக தீனா மீண்டும் மீண்டும் பொறுப்பேற்பதை எதிர்த்து இசை அமைப்பாளர் கங்கை அமரன் தன் கருத்துகளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய இசை அமைப்பாளர்கள் சங்கம் தான் தொழிலாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் சங்கம். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், பாப்பா, தஸ்னாமூர்த்தி இவர்களால் எல்லாம் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இதுதான். இளையராஜா வந்து இருக்க வேண்டிய இடம் இது. அவர் சார்பாக நான் வந்து இருக்கிறேன். இந்த விதிப்படி ஒருவருக்கு 2 வருஷம் பதவி. அடுத்த 2 வருஷம் அதிகரித்துக் கொள்ளலாம்.

இந்த சங்கத்தில் இசை அமைப்பாளர் தினா 4 வருஷம் தலைவராக இருந்தார். மீண்டும் தலைவராக இருப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். இது என்ன அரசியல் கட்சியா என நாங்க எல்லாம் சத்தம் போட்டோம்.

கொரோனா காலத்தில் சங்கத்தில் சேர்ந்த இசை அமைப்பாளர்கள் சிலருக்கு பணம் தேவைப்படுவதாக போலியாக விண்ணப்பங்கள் தயாரித்து அதில் இருந்து 80 லட்சம் வரை சுருட்டினார்களாம். இதில் இறந்து போன பவதாரிணியின் கையெழுத்தும் போடப்பட்டுள்ளது. இது எல்லாம் தெரிந்து விடுமோ என்று தான் அவர் மறுபடியும் வர அடம்பிடிக்கிறார்.

Gangai Amaran

Gangai Amaran

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. யார் சொல்லியும் கேட்பதாக இல்லை. இளையராஜாவே பேசி ஆடியோ போட்டு இருக்கிறார். இதற்கு இளையராஜா சொன்னா என்னய்யா... அந்த ஆளு சும்மா உட்கார்ந்து கத்திக்கிட்டு இருப்பான்னு வேற அசால்ட்டாகப் பேசுகிறார் தினா.

நம் அறிவை வளர்த்தவர் இளையராஜா தான். இன்று பார்க்கக்கூடிய இசை அற்புதங்களை எல்லாம் செய்து கொடுத்தவர் இளையராஜா தான். அப்படிப்பட்ட இளையராஜாவையே தூக்கி எறிஞ்சு பேசுனதனால அவர் வேண்டாம்னு நாங்க எல்லாம் முடிவு பண்ணினோம். இசை என்பது மெலடி. அது இனிமையானது.

இன்று அப்படிப்பட்ட இசை இல்லை. அந்த வகையில் இசையைப் போல இந்த சங்கத்தையும் குழப்பி வைத்துள்ளார். பல பேரை மிஸ்யூஸ் பண்ணியிருக்கிறார். அவர் நிற்கக்கூடாது என்று முடிவு பண்ணினார். அதையும் மீறி நான் நிற்பேன் என்றார். காலம் கடந்து போவதால் கோர்ட்டிலும் கேஸ் போட்டோம். அதுவும் வாபஸ் ஆனது.

அதனால் எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்று இப்படி செய்து கொண்டு இருக்கிறார். நிற்கட்டும் பார்க்கலாம் என்று நாங்களும் இருக்கிறோம். நாங்கள் எதிர்கட்சி அல்ல. ஆளப்போகிற கட்சி. கல்யாணம், பாலகிருஷ்ணன், சபேஷ் என பல பெரிய இசை அமைப்பாளர்களும் இங்கு இருக்கிறார்கள் என்று பேசினார் கங்கை அமரன்.

தமிழ்த்திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தல் இன்று (பிப்.18) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story