Gangai Amaran: கங்கை அமரன் தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவர். இவர் 80ஸ், 90ஸ்களில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகரும் கூட. இவரின் பல பாடல்கள் இன்றுவரையிலும் மக்களால் ரசிக்கும்படி இருகின்றன.
கோழி கூவுது திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராய் அறிமுகமானார். பின் வில்லுபாட்டுகாரன், சின்னவர் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் வாசிங்க:ஒத்த வார்த்தைல ரஜினியை கடுப்பாக்கிய லாரன்ஸ்.. அதிகமா பேசினா இப்படித்தான் நடக்கும்!..
இவரின் அண்ணன் இசைஞானி இளையராஜா. இவர்கள் இருவரின் கூட்டணியின் உருவான பாடல்கள் அனைத்து வெற்றி பெற்றன. கங்கை அமரனின் இயக்கமும், இசைஞானின் இசையும் படத்திற்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும்.
மேலும் கங்கை அமரன் பல திரைப்படங்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படம்தான் கரகாட்டகாரன். இப்படத்தில் ராமராஜன் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கனகா நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் கோவை சரளா, கவுண்டமணி, செந்தில் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படம் அந்த காலத்திலேயே 500 நாட்கள் தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது.
இதையும் வாசிங்க:ஆசையாக கேட்ட ரஜினியை காக்க வைத்த கமலின் ஆஸ்தான எழுத்தாளர்..! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..?
இப்படத்திற்கு ராமராஜன் நடித்தது படத்திற்கு ஒரு கூடுதல் அழகு. இப்படம் தயாராவதற்கு முன் கங்கை அமரன் இளையராஜாவிடம் சென்று கரகாட்டம் பற்றிய படம் இயக்க போவதாக தெரிவித்துள்ளார். அப்போது இளையராஜா உனக்கு கரகாட்டம் பற்றி என்ன தெரியும்?… நீ எதற்கு இப்படிபட்ட படம் எடுக்க போகிறாய் என கேட்டுள்ளார். அப்போது கங்கை அமரன் நான் என்ன கரகாட்டம் பற்றி ஆராய்ச்சியா பண்ணபோறேன்.. இரண்டு பேரு தலைல கரகத்தை வைத்து படம் எடுக்க போகிறேன். அதனால் எனக்கு ஒரு பாடலுக்கு இசை மட்டும் அமைத்து கொடுங்கள்’ என கூறியுள்ளார்.
ஆனால் இளையராஜாவிடம் ஒரு நிபந்தனை வைத்துள்ளார். படத்தின் கதை அனைத்தையும் கூறிவிட்டு ஒரே மெட்டில் இரு பாடல்கள் வேண்டும். ஒன்று டூயட் ஆடுவது போன்று, மற்றொன்று கரகாட்டம் ஆடுவது போன்று என இரு பாடல்களுக்கு ஒரே மெட்டினை போட்டு தர சொல்லியுள்ளார்.
இசைஞானி என்ன சளைச்சவரா?. தனது ஸ்டைலில் மிக கட்சிதமாக ஒரு மெட்டை போட்டு கொடுத்தாராம். அப்படி அப்படத்தில் உருவான பாடல்தான் ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல். இப்பாடல் எஸ்பிபி மற்றும் ஜானகி இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இப்பாடல் மிகப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது.
இதையும் வாசிங்க:எம்ஜிஆருக்கு மிகவும் ஸ்பெஷலான நாள் எது தெரியுமா? அட மனைவி மேல இம்புட்டு பாசத்தை வச்சிருந்திருக்காரே?
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…
நேற்று சோசியல்…