இளையராஜா செய்த வேலை!. கோபத்தில் கங்கை அமரன் எழுதிய பாட்டு!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா!..
தனது இசையால் தமிழ் சினிமாவை புரட்டிப்போட்டவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்பட மூலம் இசையமைக்க துவங்கி தனது பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இவர். 80களில் இளையராஜாவை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. இளையராஜா இசை என்றாலே வெற்றி உறுதி என்கிற நிலையும் இருந்தது.
அவரும் தனது இசையால் பல திரைப்படங்களை ஓட வைத்தார். 20 வருடங்கள் தமிழ் சினிமாவின் இசை சக்கரவர்த்தியாக இருந்தார். இப்போது அவரின் சிம்மாசனம் அவரிடமே இருக்கிறது. இப்போதும் 70,80 கிட்ஸ்களுக்கு பிடித்தமான பாடல்கள் இளையராஜா இசையமைத்த பாடலாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: குணா படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!.. ஷாக் கொடுத்த சந்தானபாரதி!.. இதெல்லாம் நம்பவே முடியலயே!..
இளையராஜாவுக்கு பல வருடங்கள் உறுதுணையாக இருந்தவர் அவரின் தம்பி கங்கை அமரன். இளையராஜாவின் குணம் அறிந்து அவருக்கும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே பாலமாக இருந்தவர். இளையராஜா கோபக்காரர். பொசுக் பொசுக் என அவருக்கு கோபம் வந்துவிடும். அவரின் கோபம் பிரச்சனை ஆகிவிடாமல் உடனிருந்து பார்த்து கொண்டவர் கங்கை அமரன்.
ஆனால், கங்கை அமரன் தனியாக இசையமைக்க துவங்கியபோது அவரை கடுமையாக திட்டியவர் ‘இளையராஜா. ‘இசையை பற்றி உனக்கு என்ன தெரியும்?. இனிமேல் என் முகத்தில் முழிக்காதே’ என சொல்லி அவரை விரட்டிவிட்டார். ஆனால், பல படங்களில் இனிமையான இசையை கங்கை அமரன் கொடுத்தார். மேலும், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவராக அவர் இருந்தார்.
இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்கில் தனுஷுக்கு இவ்ளோ கோடி சம்பளமா? இசைஞானினாலே காஸ்ட்லிதான் போல
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘தினமும் மதிய உணவு நேரத்தில் நானும், பாஸ்கரும்(சகோதரர்) இளையராஜா இருக்கும் ஸ்டுடியோவுக்கு போய்விடுவோம். அவர் சாப்பிடுவார் என்பதால் சைவ சாப்பாட்டை கொண்டு போவேன். அவரின் வீட்டிலிருந்து சாப்பாடு வரும். மூன்று பேரும் பகிர்ந்து சாப்பிடுவோம்’.
ஆனால், இனிமேல் நீங்கள் தனியாக சாப்பிடுங்கள். அப்போதுதான் உடம்பில் ஒட்டும் என அவரின் வீட்டில் சொல்லிவிட்டார்கள். எனவே, ஒருநாள் ‘இனிமேல் நான் தனியாக சாப்பிட்டுக்கொள்கிறேன்’ என இளையராஜா எங்களிடம் சொன்னார். ‘சாப்பாட்டுக்கு வழி இல்லாமலா உன்னிடம் வந்து சாப்பிடுகிறோம்’ என நான் சண்டை போட்டேன். அப்போது தர்மதுரை படத்திற்காக ‘ஆணென்ன பெண்ணெண்ண’ பாடல் உருவாகி கொண்டிருந்தது. நான்தான் அந்த பாடலை எழுதினேன். அந்த பாட்டில் வரும் வரிகள் எல்லாம் கோபத்தில் நான் எழுதியதுதான்’ என கங்கை அமரன் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மனுஷன் யாருக்குத்தான் என்ன பண்ணல? இளையராஜா செய்த செயலால் கதறி அழுத பாடகர் மனோ!