Gangers: கேங்கர்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்… மதகஜராஜாவின் வசூலில் கால்வாசி கூட வரலயே!

gangers, mathakajaraja
சுந்தர்.சி மற்றும் வடிவேலு காம்போவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கேங்கர்ஸ் படம் வெளியாகி உள்ளது. சுந்தர்.சி இயக்கிய இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்ததுமே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. அதன்படி வடிவேலுக்கு இது கம்பேக் என்றும் சொன்னார்கள். படம் வெளியான நேற்றும் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்களே அதிகம் வந்தன. ஒரு சிலர் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களைச் சொன்னார்கள்.
இன்டர்வல் வரை படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. காமெடியும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அதன்பிறகுதான் கதையே வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் வடிவேலுவின் காமெடி அட்டகாசமாக உள்ளது. கடைசி 10 நிமிடம் திரையரங்கைத் தெறிக்க விடுகிறார் என்றனர்.
ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் வடிவேலுவின் காமெடிக்காகவே படம் பார்க்க வருகின்றனர். இந்தப் படத்துடன் வெளியான அகில உலக சூப்பர்ஸ்டார் மிர்ச்சி சிவாவின் சுமோ படம் ரசிகர்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை என்றே தோன்றுகிறது. இணையதளங்களில் எங்கு பார்த்தாலும் கேங்கர்ஸ் பற்றிய பேச்சுத்தான் அடிபட்டது.

கேங்கர்ஸ் படத்தில் 2 ஹீரோயின். கேத்தரின் தெரசா, வாணி போஜன். படத்தில் கேத்தரின் தெரசா டீச்சராகவும் அநீதிகளைக் கண்டு பொங்குபவராகவும் நடித்துள்ளார். அப்படி இருக்க இவருக்கு ஏன் கவர்ச்சிப் பாடல் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது. சரி. படத்தின் முதல் நாள் வசூல் என்னென்னு பார்க்கலாமா…
முதல் நாளில் சேக்நில்க் (sacnilk) அறிக்கையின்படி இந்திய அளவில் 58 லட்சம் வசூலித்துள்ளது. இது முன்கூட்டியே எடுத்த கணக்கெடுப்பு. இதற்கு சற்று அதிகமாகவும் வரலாம். இந்த ஆண்டின் துவக்கத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான மதகஜராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியானது. அதன் முதல் நாளில் 3 கோடியை வசூலித்துள்ளது. அப்படிப் பார்க்கும்போது கேங்கர்ஸ் மதகஜராஜாவின் முதல் நாள் வசூலில் கால்வாசி கூட வரவில்லை என்பதையே காட்டுகிறது.