Gangers: சுந்தர்.சி.யின் கேங்கர்ஸ் ரெக்கார்டு பிரேக்… அடேங்கப்பா இப்பவும் வடிவேலுவுக்கு இவ்ளோ மவுசா?

gangers
சுந்தர்.சி., வடிவேலு இணைந்து நடித்த படங்கள் என்றாலே வயிறு குலுங்க நம்மை சிரிக்க வைக்கும் ரகங்கள் தான். நகரம் படத்தில் என் ஏரியாவுல வந்து என்னை அடிச்சிப் பாரு. தைரியம் இருந்தா என் வீட்டுக்கு வா அப்படி இப்படின்னு பயத்தை மனசுக்குள்ள வச்சிக்கிட்டு வெளியே தைரியமாகப் பேசி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் வடிவேலு.
அவர் சொன்ன இடங்களுக்கு எல்லாம் சுந்தர்.சியும் வந்து பீதியைக் கிளப்புவார். இது படம் பார்க்கும் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. அந்த வகையில் மீண்டும் இவர்களது காம்போ கேங்கர்ஸ் என்ற படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த டிரெய்லரிலும் வடிவேலு பேசுற எல்லா டயலாக்குகளும் பழைய வடிவேலுவை நினைவுபடுத்துகின்றன.
கேங்கர்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது சில நிமிடங்களிலேயே யூடியூப்பை ஆக்கிரமித்துள்ளது. வடிவேலு, சுந்தர்.சி காம்போ என்றாலே மிகப்பெரிய ஹிட் தான். ஏற்கனவே தலைநகரம், நகரம் படங்களில் பட்டையைக் கிளப்பி இருப்பாங்க. அந்த வகையில் இப்போது மீண்டும் கேங்கர்ஸ்ல இணைந்ததும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. இந்த டிரெய்லர் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
கேங்கர்ஸ் படத்தில் சுந்தர்.சி. தயாரித்து இயக்கி நடித்துள்ளார். அவருடன் இணைந்து வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், பகவதி பெருமாள், மைம் கோபி, ரெடின்கிங்ஸ்லி, முனீஸ்காந்த், இளவரசு மற்றும் சிங்கம்புலி, முத்துக்காளை என நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாமல் பலர் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க சிரிப்பு சரவெடியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. சி.சத்யா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 24ல் திரையரங்குகளில் வெளியாகிறது.