முடிஞ்சா சிரிங்கடா!. வாழ்ந்து கெட்ட வடிவேலு!.. கேங்கர்ஸை பொளக்கும் புளூசட்ட மாறன்!...

blue satta maran, gangers
சுந்தர்.சி., வடிவேலு காம்போவில் வெளியான கேங்கர்ஸ் படத்தின் விமர்சனத்தைப் பற்றி பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
சுந்தர்.சி. இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கேங்கர்ஸ். படத்தோட ஆரம்பத்துல ஒரு ஸ்கூலைக் காட்டுறாங்க. அதுல ஒரு சின்னப்பொண்ணு காணாமப் போயிடுது. அதுக்குக் காரணம் இந்த ஊருல ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்குற 2 பேர்தான் காரணமாக இருக்க முடியும். அப்படின்னு அந்த ஸ்கூல்ல வேலை பார்க்குற டீச்சர் போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு மனு போடுறாங்க.
அங்கே இருந்து இவங்களைக் கண்காணிக்க ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்புறாங்க. அப்படி சுந்தர்.சி. பிடி. மாஸ்டரா ஜாய்ன் பண்றாரு. அங்கே ஏற்கனவே வடிவேலு பிடி மாஸ்டரா இருக்காரு. அந்த ஊருல நடக்குறதைப் பார்த்து சுந்தர்.சி. அதிகமா பொங்குறாரு. அவரு ஏன் அதிகமா பொங்குறாரு? அந்த ஊருல என்ன நடக்குது? அந்தப் பொண்ணு ஏன் காணாமப் போச்சுங்கறதுதான் கதை.
சுந்தர்.சி. படம்னாலே மூளையைக் கழட்டி வச்சிட்டுத்தான் பார்க்கணும்னு நமக்கு நல்லாவே தெரியும். லாஜிக் இல்லாத மேஜிக் இருக்கும். 15 வருஷத்துக்குப் பிறகு இந்தப் படம் பண்றாங்கன்னபோது ரொம்பவே எதிர்பார்த்துப் பார்த்தோம். ரொம்ப பெரிய அதிர்ச்சி. படத்துல சுந்தர்.சி., வடிவேலு காம்போ சுத்தமா ஒர்க் அவுட் ஆகவே இல்லை. அதுக்கு முக்கியமான காரணம் வடிவேலுதான்.

அவருன்னாலே நமக்கு ஞாபகம் வருவது அவரோட டயலாக் டெலிவரியும், பாடி லாங்குவேஜூம்தான். இந்த ரெண்டுமே படத்துல மிஸ்ஸிங். வடிவேலு எதைப் பண்ணினாலும் நாம சிரிப்போம். இந்தப் படத்துல என்னென்னமோ பண்றாரு. நமக்கு சிரிப்பே வர மாட்டேங்குது. வெறும் 10பர்சன்டைக் கூட 200 பர்சன்டா டெலிவரி செய்ற வடிவேலுவுக்கு இந்தப் படத்துல எதுவுமே செய்ய முடியல.
இந்தப் படத்துலயும் ஆடியன்ஸ் சிரிச்சாங்க. அது எப்படின்னா 200 பர்சன்ட் கொடுக்கக்கூடிய காமெடிக்கு 50 பர்சன்ட் தான் அவரால கொடுக்க முடிஞ்சது. அதுக்குத்தான் சிரிச்சாங்க. சமீபத்தில் வெளியான மதகஜராஜா மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. அதுக்கு முக்கியமான காரணம் 12 வருஷத்துக்கு முன்னாடி அதுல நடிச்சவங்க ஃபுல் எனர்ஜியோடு நடிச்சிருப்பாங்க.
அதனாலதான் ரசிக்க முடிந்தது. அவங்களே இப்ப நடிச்சாலும் அப்படி வராது. அதுதான் இந்தப் படத்திலும் நடந்துருக்கு. இந்தப் படத்துல 3 வில்லன்கள் ஹீரோகிட்ட அடிவாங்குறதுக்குன்னே வராங்க. சுந்தர்.சி. படம்னாலே ரெண்டு மூணு ஹீரோயின், 3 கும்மாங்குத்து சாங். அதெல்லாம் மிஸ்ஸிங். இப்படி மனித வாழ்க்கைக்கே அத்தியாவாசியத் தேவையானது ஒண்ணுமே இல்லாம இருக்கு.
ரொம்ப நாள் கழிச்சி வராங்கடா படம் பார்க்கலாம்னு போனா முடிஞ்சா சிரிங்கடா பார்ப்போம்னு பர்ஸ்ட் ஆஃப்பும், இதுக்கு பர்ஸ்ட் ஆஃபே தேவலங்கற மாதிரி செகண்ட் ஆஃப்பும் எடுத்து வச்சிருக்காங்க. காமெடி படம் பார்க்கப் போயி இந்தக் கதிக்கு ஆளான நம்மளை நினைச்சி வருத்தப்படுறதா இல்ல வாழ்ந்து கெட்ட வடிவேலுவை நினைச்சி வேதனைப்படுறதா ஒண்ணுமே புரியல என்கிறார் புளூசட்டை மாறன்.