Gangers: கேங்கர்ஸ்ல வடிவேலு காமெடி எடுபட்டதா? கொடுத்த காசுக்கு ஒர்த்தா? பயில்வான் என்ன சொல்றாப்ல?

bayilvan gangers
சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் இன்று ரிலீஸான படம் கேங்கர்ஸ். இது எப்படி இருக்குன்னு பிரிபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
சுந்தர்.சி. இயக்கி நடித்த படம் கேங்கர்ஸ். வடிவேலு, கேத்தரின் தெரசா, பகவதி பெருமாள், மைம் கோபி, வாணிபோஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். வெங்கட்ராகவன் கதை, வசனம் எழுதியுள்ளார். சி.சத்யா இசை அமைத்துள்ளார்.
ஒரு அமைச்சர் 100 கோடி ரூபாயைப் பதுக்கி வைத்து இருக்கிறார். அது சுந்தர்.சிக்கு தெரிய வருகிறது. ஒரு பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஒரு மாணவி கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். ஒரு மாணவன் மாடியில் இருந்து தூக்கி வீசப்படுகிறான்.
இதை எல்லாம் கண்டுபிடிக்க உடற்பயிற்சி ஆசிரியராக சேர்கிறார் சுந்தர்.சி. அதே பள்ளியில் வடிவேலு உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறார். வடிவேலு பகவதி பெருமாளுக்கு ஆசை காட்டுகிறார். 100 கோடி ரூபாயை நாம கண்டுபிடித்தால் எல்லாரும் பங்கு போடலாம் என்கிறார். அமைச்சரோட தம்பி தான் பணத்தை மறைச்சி வச்சிருக்காரு.
பள்ளியில் நடக்கும் காமெடி, ஆக்ஷன், கண்டுபிடிப்புகள், சஸ்பென்ஸ்சைக் கண்டுபிடிக்கிறதுதான் கதை. இதுல கேங்ஸ்டராக வரும் எல்லாருமே காமெடி வில்லன்கள். கேத்தரின் தெரசா வெளுத்து வாங்கி இருக்கிறார். அவரே கவர்ச்சி டான்ஸ் ஆடுகிறார். வடிவேலுவும் ஆடுகிறார். சுந்தர்.சி. அமைதியாக நடித்துள்ளார். வடிவேலுவைப் பார்த்ததுமே காமெடி வரல.

அவர் நிறைய பேசுகிறார். பேசினால்தான் காமெடி என்பது அல்ல. பாடி லாங்குவேஜ் வச்சி சிரிக்க வைப்பவர். இதுல ஏன் மிஸ் ஆச்சுன்னு தெரியல. பகவதி பெருமாளோடு சேரும்போது தான் சிரிக்க வைக்கிறார். சண்டை இயக்குனர் ராஜசேகர் பின்னிப் பெடல் எடுத்துருக்காரு. ஆக்ஷன் காட்சியைக் காமெடியாக அட்டகாசமாகச் செய்துள்ளார். கடைசி 10 நிமிஷம் அவ்ளோ காமெடி.
வடிவேலுவுக்கு ஏன் இவ்ளோ மேக்கப்? உதடுகளில் கருப்பு மை ஏன் தடவினாருன்னு தெரியல. மைம் கோபி வில்லத்தனத்தை அவரால முடிஞ்ச அளவு பண்ணிருக்காரு. முண்டக்கண்ணு வச்சி பகவதி பெருமாள் திறமையாகப் பண்ணிருக்காரு. இனி அவருக்குப் பல படங்கள் வரலாம். வாணிபோஜன் பிளாஷ்பேக்ல சுந்தர்.சி.க்கு மனைவியாக வருகிறார். ஒரே சீன்ல வந்தாலும் கிளைமாக்ஸ்ல விமல் கதாநாயகனாக வருகிறார். கொடுத்த காசுக்கு தியேட்டர்ல போயி கலகலன்னு சிரிச்சிட்டு வரலாம். முற்றிலும் வழக்கமான பொழுதுபோக்கு மசாலா தான் கேங்கர்ஸ் என்கிறார் பயில்வான்.