Gangers: அநீதியைக் கண்டு பொங்குற டீச்சர் அரைகுறை டிரஸ்சோடு ஆடலாமா? கேங்கர்ஸ்ல இது ஒட்டலையே!

by sankaran v |   ( Updated:2025-04-24 05:58:12  )
gangers movie
X

gangers movie

சுந்தர்.சி., வடிவேலு காம்பினேஷன்ல 14 ஆண்டுக்குப் பிறகு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள படம் கேங்கர்ஸ். இன்று ரிலீஸ். மீடியாக்களில் எங்கு திருப்பினாலும் இதே பேச்சுதான். வடிவேலு கம்பேக் கொடுத்துட்டாரா? படம் நல்லாருக்கான்னு தான் கேட்குறாங்க.

வடிவேலு நீண்ட நாளைக்குப் பிறகு ரசிகர்களை மனம் கவர்கிறார். உடல் பருமனும், உப்பிப் போன முகமும் தான் நமக்குக் கொஞ்சம் ஒட்ட மறுக்கிறது. பழைய வடிவேலு என்றால் அவரது குரல்தான். அதிலும் வடிவேலு படத்தில் வசனம் நிறைய பேசுகிறார். முன்பு பாடிலாங்குவேஜிலேயே அசத்துவார். அது இதுல கொஞ்சம் மிஸ்ஸிங்.

படத்துல வழக்கம்போல காமெடி தான் பிளஸ். வடிவேலு டைரக்டர் சொல்றதை எல்லாம் கேட்டு இப்படி நடிச்சாருன்னா எல்லா படங்களுமே ஹிட்டு தான். அந்த வகையில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வடிவேலுவை ரசிக்கவும் முடிகிறது. படத்துல ஒட்டாத விஷயம்னா இதுதான். கேங்கர்ஸ் படத்துல 2 ஹீரோயின். ஒண்ணு கேத்தரின் தெரசா.

இன்னொன்னு வாணி போஜன். இதுல கேத்தரின் தெரசா தான் பள்ளிக்கூட டீச்சர். அநீதியைக் கண்டு நீதி, நேர்மை, நியாயம்னு பொங்குறாங்க. கடைசில பார்த்தா ஒரு டான்ஸ் ஆடுறாங்க. ஒரு டீச்சர் கண்ணியமா இருக்க வேண்டாமா? எங்கேயோ போய் அவங்க பாட்டுக்கு அரைகுறை உடையோடு டான்ஸ் ஆடுறாங்க. அதெல்லாம் ஒட்டாம இருக்கு.

அநீதியைக் கண்டு பொங்குறாங்க. அதே நேரம் தான் உயிரைப் பணயம் வச்சிப் பொங்குற அளவுக்கு என்ன இருக்கு? இதெல்லாம் படத்துக்காக வைக்கப்பட்ட காட்சியா இருந்தா கூட இதை இன்னும் கொஞ்சம் சரியான்னு யோசிச்சி வச்சிருக்கலாம். வடிவேலு பல கெட்டப் போடுறதால சிரிப்புக்குப் பஞ்சமில்லைன்னு சொல்லலாம். வடிவேலுவை வச்சி வின்னர் கொடுப்பாருன்னு பார்த்தா டின்னர் கொடுத்துருக்காரு என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.

கேத்தரின் தெரசா தமிழ்சினிமாவில் கலகலப்பு 2, வந்தா ராஜாவாத்தான் வருவேன், நீயா 2, அருவம், மெட்ராஸ், கடம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு மலையாள நடிகை. துபாயில் பிறந்தவர். முதலில் மாடலிங் துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story