கங்குவா கதை லீக் ஆகாம இருக்க படக்குழு செய்த வேலை!. இப்படியெல்லாம் யோசிப்பாங்களா!..

Published on: August 28, 2024
ganguva
---Advertisement---

Kanguva: பொதுவாக ஒரு திரைப்படம் உருவாகும்போது அந்த படத்தின் காட்சிகளோ, கதையோ வெளியே லீக் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர்கள் தெளிவாக இருப்பார்கள். ஆனால், அதையும் மீறி எப்படியோ காட்சிகள் லீக் ஆகிவிடும். அதாவது, ஒரு இயக்குனர் படத்தை உருவாக்கும்போது தனது உதவி இயக்குனர்களிடம் கதை மற்றும் திரைக்கதையை விவாதிப்பார்.

அப்போது அது என்ன மாதிரியான கதை என்ன என்பது உதவி இயக்குனர்களுக்கு தெரிந்துவிடும். அவர்கள் யாரிடமும் சொல்ல மாட்டார்கள். ஆனால், படத்தின் தலைப்பு, அது என்ன மாதிரியான படம் என்பதை யாரிடமாவது வெளியே சொல்லிவிடுவார்கள். அதுதான் வலைப்பேச்சி போன்ற யுடியூப் சேனல்களில் வெளியே வரும்.

இதையும் படிங்க: ‘கோட்’ வெற்றிக்கு மணிரத்னத்தை ஃபாலோ செய்கிறாரா VP? இது என்ன புதுசா இருக்கு?

சோர்ஸ் என்பது உதவி இயக்குனர்கள் மூலம் மட்டுமல்ல. தயாரிப்பாளர் அலுவலகம், படப்பிடிப்பில் வேலை செய்பவர்கள், புரடெக்‌ஷன் மேனேஜர்கள் என பலரின் மூலம் கதைகள் கசியும். அல்லது எடிட்டிங் அறை, உதவி கேமராமேன்கள், கலை இயக்கத்தில் இருப்பவர்கள், நடன அமைப்பில் இருப்பவர்கள் என யாரேனும் ஒருவர் யாரிடமாவது சொல்ல அதுதான் வெளியே கசியும்.

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் உறவினர் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனர் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். மிகவும் அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. அதோடு அக்டோபர் 10ம் தேதி இப்படம் வெளியிடுவதாகவும் சொல்லப்பட்டது.

ganguva

ஆனால், அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படம் வெளியாவதால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், இப்படத்தின் கதை வெளியே கசியக்கூடாது என்பதில் படப்பிடிப்பு குழு உறுதியாக இருக்கிறது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியில் அதிகம்பேர் நடித்திருக்கிறார்கள். எனவே, அனைவரையும் கூட்டமே வைத்தே டப்பிங் பணிகளையும் செய்து வருகிறார்கள்.

பொதுவாக டப்பிங்கின் போது எல்லா காட்சிகளையும் ஓடவிடுவார்கள். எந்த காட்சிக்கு பேச வேண்டுமோ அதில் நிறுத்தி பேச வைப்பார்கள். ஆனால், இப்படத்தில் வசனம் எழுதியுள்ள பாடலாசிரியர் கார்க்கி எந்த காட்சிக்கு டப்பிங் பேச வேண்டுமோ அதை மட்டும் திரையில் காட்ட சொல்லி இருக்கிறாராம். இதன் மூலம் காட்சிகள் பற்றிய செய்தி வெளியே கசியாது என நினைக்கிறாராம்.

இதையும் படிங்க: 90 வயசு கிழவியா இருந்தாலும் விடமாட்டாங்க!… நைட் கதவை தட்டுவாங்க!.. நடிகை பகீர் பேட்டி..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.